FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[25] கடவுளின் பேழையும் பினேகாசின் மனைவியும்: நிழல் - நிஜம் [1சாமூ 4:19-22]

அன்பானவர்களே 🙏

🚩 நிழல் நிஜம் 🚩

 நிழல்:
1 சாமுயேல் 4:19-22.

 நிஜம் :
19 அப்பொழுது பினகாசின் மனைவியான அவருடைய மருமகள் நிறைகர்ப்பினியாய் இருந்தாள். 


 கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்து விட்டதையும் கேட்டு அவள் பேறுகால வேதனைக்குள்ளாகி, குனிந்து மகவைப் பெற்றெடுத்தாள். 

20 அவள் சாகும் தருவாயில் இருந்தபோது அவள் அருகில் இருந்த தாதியர் அவளை நோக்கி, "அஞ்சாதே, நீ ஒரு மகனை பெற்றெடுத்துள்ளாய்" என்று கூறினர். அவளோ அதற்கு மறுமொழி கூறவில்லை; அதைப் பொருட்படுத்தவுமில்லை. 

21 கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்ததையும் முன்னிட்டு "இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது" என்னும் பொருள்பட அவள் தன் குழந்தைக்கு இக்க போது என்று பெயரிட்டாள். 

22 அவள் கூறியது; "இஸ்ரயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது, ஏனெனில் கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது" என்றாள். 
1 சாமுவேல் 4:19 - 22

இங்கு காண்பிக்கப்பட்ட நிழலை கவனிக்கும் பொழுது....

இஸ்ரயேல் ஜனங்கள் பரிசுத்தமான காரியங்களில் தவறுகள் செய்ததால் கடவுளின் பெட்டி பிடிபட்டது. 

கடவுளின் பெட்டி, கடவுளின் பிரசன்னம், மகிமையை அடையாளப்படுத்தும்.

முதலாம் வருகையின் காலப்பகுதியில் இஸ்ரயேல் ஜனங்கள் பரிசுத்தமான காரியங்களில் தவறு செய்ததால், கடவுளின் பிரசன்னமாகிய மகிமையாகிய நம் ஆண்டவர் அவர்களிடமிருந்து நீக்கப்பட்டார்.

சில காரியங்கள் உங்கள் ஆராய்ச்சிக்கும் சிந்தனைக்கும்: 
1. ஏலி
2. பினெகாஸ்
3. பினெகாஸின் மனைவி 
4. கடவுளின் பெட்டி 
5. பிள்ளை, பிள்ளையின் பெயர் - மகிமை இஸ்ரயேலை விட்டு விலகிப் போயிற்று.

ஏலி + பினெகாஸ் = கீழ்ப்படியாத பிதாக்கள் மற்றும் அவர்களுடைய புத்திரர்கள் - 
மத்தேயு 23:30-31

பினெகாஸின் மனைவி - உணர்வடைந்த ஜனங்கள் (மகிமை இஸ்ரயேலை விட்டு போயிற்று)

பிள்ளை
இக்கபோது: மாட்சி அகன்று விட்டது. 
மகிமை இஸ்ரயேலை விட்டுப் போயிற்று என்பதற்காக இருக்கும் அனைத்து அடையாளங்களும்.

அதுபோல,

நாமும் கடவுளின் காரியங்களில் தவறுகள் செய்தால் நம் கடவுளாம் பரமதந்தைக்கு மகிமையாக இருக்கும் நம் ஆண்டவரின் கிருபை நம்மை விட்டு நீங்கும்.

🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱

கிறிஸ்துவுக்குள்

Comments

Post a Comment