FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




ANNOUNCEMENTS

Announcements

invite for bible study, android app and suggestions

🔔 அறிவிப்புகள்! 📢



நடத்தும்

சுவாரஸ்யமான விவிலிய கலந்துரையாடல்

பைபிளில் உள்ள ஆச்சரியங்கள் உங்கள் சிந்தனைக்கு...
1. இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள்/ பிறந்த வருடம் பைபிளில் மறை பொருளாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை எவ்வாறு கணக்கிடுவது?

2. இயேசு கிறிஸ்து 33 1/2 வருடம் தான் இந்த உலகத்தில் வாழ்ந்தார் என்று பைபிளில் எங்கு மறை பொருளாக கூறப்பட்டுள்ளது. அதை எவ்வாறு கணக்கிடுவது?

3. 2 தெசலோனிக்கேயர் 2:3. இந்த வசனத்தில் உள்ளபடி எது விசுவாச துரோகம்? யார் அந்த கேட்டின் மகன்? அவன் வெளிப்பட்டு விட்டானா? இல்லையா?

4. 2000 வருடத்துக்கு முன்பாகவே அந்தி கிறிஸ்து வந்தாயிற்று என்று பைபிள் தெளிவாக சொல்லி இருக்க, இனிமேல் தான் அந்தி கிறிஸ்து வருவான் என்று எதிர்பார்ப்பது சாத்தியமா?

5. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காண்பியுங்கள் என்று சொன்ன நமது ஆண்டவர், அவரை அடிக்கும் போது, மறு கன்னத்தை காண்பிக்க வில்லையே! (யோவான் 18:22,23) ஏன்? அதன் அர்த்தம் என்ன?

6. சூரியனையும் சந்திரனையும் நான்காம் நாளில் படைத்திருக்க, முதலாம் நாள் எப்படி வெளிச்சம் வந்தது?

7. பரலோக ராஜ்ஜியம் கடுகு விதைக்கும், புளித்த மாவுக்கும், மீன் வலைக்கும் (மத்தேயு 13) ஏன் இயேசு கிறிஸ்து ஒப்பாக பேசினார்? இதன் அர்த்தம் தெரிந்தால் மட்டுமே பரலோக ராஜ்ஜியம் போக முடியும் என்று உறுதியாக கூறுகிறார்! ஏன்?

8. "சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான் 8:32). எது உங்களை விடுதலையாக்கும்? சத்தியமா? வசனமா?

இன்னும் அநேக கேள்விகளுக்கு விடை காண, நமது GOSPEL SOCIETY தமிழ் நாட்டிலும், OnLine மூலமாகவும் நடத்தும் சுவாரஸ்யமான விவிலிய கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள்.



🎥 WATCH and EXPLORE!
Below, Find our collection of Public Bible meetings and Online Discourses of Deep Scriptural Insights.
MAY GOD BLESS YOU



Comments

Post a Comment