Contact details
வலைபதிவேடு பற்றி...🗓️
அன்புடையீர், வணக்கங்கள் 🙂🙏
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
2 THESSALONIANS 1:2
உண்மையான ஒரே கடவுளாகிய பரமதந்தையையும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.
யோவான் 17:3
நிலைவாழ்வு பெறுவதற்கு கடவுள் மனுகுலத்திற்கு தந்திருக்கும் பொக்கிஷமான விவிலிய வார்த்தைகளை ஆராய்ந்து அறிவதே நமது MENORA வலை - பதிவேட்டின் நோக்கம்.
ஒத்த சிந்தையுள்ள விவிலிய ஆராய்ச்சி வகுப்பு பாடங்களின் காணொளிகள் அனைத்தும் இங்கு பகிரப்பட்டுள்ளது. இந்த முடிவற்ற கற்றலில் நீங்களும் பங்கு கொண்டு, பகுத்தறிவோடு நிதானமாய் கண்டு பயனடையுங்கள். தங்கள் கருத்துக்களை நிச்சயமாக பகிரவும். முரண்பாடுகள் ஏதேனும் இருந்தாலும் தெரியப் படுத்தவும். நன்றி.
நம்முடையது முற்றிலும் வணிக நோக்கம் அல்லாத ஓர் முயற்சி.எந்தவித வருவாயோ, இலாபமோ நாங்கள் தேடவில்லை.
ஆதாமின் மூலம் வரும் மரணத்தில் இருந்து மனுக்குலத்திற்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் வரும் மீட்பு பற்றியும், கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலரும் பிரசங்கித்த வரவிருக்கும் கடவுளின் அரசாட்சி பற்றியுமான நற்செய்தியினை அனைவருடன் பகிர்ந்து கொள்வதே எமது குறிக்கோள்.
கடவுளின் வார்த்தையைப் பகிர்ந்து கொள்ள கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் பெரும் பாக்கியமாகவும், ஆசீர்வாதமாகவும் எண்ணி மகிழ்கிறோம்.
நேரில், நமது விவிலிய ஆராய்ச்சி கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள தாங்கள் விரும்பினால், கீழுள்ள WhatsApp பட்டன் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
பரமதந்தை மற்றும் இறைமகனாரின் அருளாசீர் உங்களோடு இருப்பதாக. ஆமென்.
CONTACT