🗣️நமது விசுவாசம்✋

தாம் ஒருவராய் சாவாமை உள்ளவரும் - ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும் - ஆதியும் அந்தமும் இல்லாத ஏக சக்கராதிபதியுமான
யா_வே என்னும் பெயருள்ள ஒன்றான மெய்க் கடவுளை விசுவாசிக்கிறோம்.
(1 தீமோத்தேயு 6:15,16)(யாத்திராகமம் 6:3)
அவருடைய ஒரே படைக்கப்பட்ட மகனும் - நம்முடைய ஆண்டவரும் காப்பாற்றுகிறவருமான
இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறோம்.
(யோவான் 3:16)
இவர் கண்ணுக்கு புலப்படாத கடவுளின் தற்சொரூபமும் - எல்லா படைப்புக்கும் முந்தினவர். - கடவுள் இவரை கொண்டும் - இவருக்கென்றும் - உலகங்களை எல்லாம் உண்டாக்கி - இவரையே சர்வத்துக்கும் சுதந்திரவாளியாகவும் நியமித்தார். - எல்லாம் இவருக்குள் நிலை நிற்கிறதென்றும் விசுவாசிக்கிறோம்.
(கொலோசெயர் 1:15)
(எபிரேயர் 1:2)
இவர் கடவுளின்மகனாக இருந்தும் - கடவுளுக்கு சமமாயிருக்க எண்ணாமல் - அக்கிரமங்களினால் ஜீவனை இழந்த மனிதர் பேரில் மனதுருகி தம்மை தாமே வெருமையாக்கி - மனிதனாகி எல்லாரையும் மீட்க்கும் பொருளாக - தம்முடைய ஜீவனையே கொடுத்து - கடவுளுக்கும் மனிதருக்கும் சமாதானத்தை உண்டு பண்ணினாரென்றும் விசுவாசிக்கிறோம்.
(யோவான் 10:36)
ஆதலால் கடவுள், இவரை மரித்தோரிலிருந்து எழுப்பி - தம்மைப்போல் குமாரனும் ஜீவனுடையவராயிருக்க அருள் செய்து - எல்லாவற்றிக்கும் மேலாக உயர்த்தி - தம்முடைய வல்லமையின் வலது பாரிசத்தில் - வீற்றிருக்க செய்தார் என்றும் விசுவாசிக்கிறோம்.
(திருத்தூதர் பணிகள் 3:15)
(யோவான் 5:26)
இவரே கடவுளுக்கும் மனிதருக்கும் - இணைப்பாளராகவும் - சபையாகிய உடலுக்கு தலையாகவும் - இருக்கிறார் என்றும் விசுவாசிக்கிறோம்.
இவர் பரலோகத்துக்கேறி - தாம் வாக்குத் தத்தம் பண்ணின உன்னதத்திலிருந்து வரும் பெலனாகிய புனித சக்தியை- விசுவாசிகளடங்கிய திருச்சபைக்கு அருளி - கடவுளின் சித்தத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தி - பலியின் ஜீவியத்தில் அவர்களை நடத்தி வருகிறாரென்றும் விசுவாசிக்கிறோம்.
(திருத்தூதர் பணிகள் 1:11)
பரமதந்தை குறித்த காலத்தில், இவர் பலியின் மரணத்துக்குட்பட்டு - முதலாம் உயிர்த்தெழுதல் அடையும் - தம்முடைய சபையாகிய சகல இறை மக்களோடும் இப்பூமியை நீதியாய் நியாயந்தீர்த்து - சகல ஆட்சிபுரிவோரின் அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து என்றும் அழியாத தம்முடைய நீதியுள்ள அரசாட்சியை ஸ்தாபிப்பார் என்றும் விசுவாசிக்கிறோம்.
மரணமடைந்த மற்றவர்கள் -கிறிஸ்துவின் அரசாட்சிக் காலத்தில் -அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கபட்டு -அவர் தம்முடைய மரணத்தினால் சம்பாதித்த - நிலை வாழ்வை அடைய வழிநடத்தப்பட்டு - பூரணப்படுவார்கள் - ஆனால் மனப்பூர்வமாய் சீர்திருந்தாதவர்கள் - இரண்டாம் மரணத்திலே அழிக்கப்படுவார்கள் என்றும் விசுவாசிக்கிறோம்.
(திருவெளிப்பாடு 20:5)
(1 கொரிந்தியர் 15:23)
எல்லாச் சத்துருக்களையும் தமது பாதபடியாக்கும் மட்டும் -இவர் ஆளுகை செய்து - கடைசி சத்துருவாகிய மரணத்தையும் பரிகரித்து -எல்லாவற்றையும் முந்தின சீருக்குக் கொண்டு வந்து - பரமதந்தைசகலத்திலும் சகலமுமாய் இருப்பதற்கு - அவருக்கு இராச்சியத்தை ஒப்புக்கொடுத்து - அவருக்கு கீழ்ப்பட்டிருப்பார் என்றும் விசுவாசிக்கிறோம்.
(1 கொரிந்தியர் 15:25,26,28).
ஆமென்
🆃🅷🆈㊙🅺🅸🅽🅶🅳🅾🅼㊙🅲🅾🅼🅴
Praise the Lord
ReplyDeletePraise the lord
ReplyDeleteAmen
ReplyDelete