FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[52] THE TWO PILLARS | இரண்டு தூண்கள் - 1 KINGS 7:15-21

அன்பானவர்களே 🙏
🚩நிழலும் நிஜமும்🚩
கேள்வி

நிழல் :
1 அரசர்கள் 7:15 - 21
15 அவர் இரண்டு வெண்கலத் தூண்களை வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை.

16 அத்தூண்களின் உச்சியல் வைப்பதற்கென்று வெண்கலத்தால் இரு போதிகைகள் வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம். 

17 அவர் அவ்விரு தூண்களின் மேல் இருந்த போதிகைகளுக்கென வலைப்பின்னல்களும் சங்கிலித் தொங்கல்களும் ஏழேழு செய்தார்.

18 மேலும் அவர் இரண்டு வரிசை மாதுளம் பழ வடிவங்கள் செய்து அவற்றைத் தூணின் உச்சியிலுள்ள போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலின் மேல் இரு வரிசையாக அமைத்தார்; மற்றதற்கும் அவ்வாறே செய்தார். 

19 முன்மண்டபத் தூண்களின் உச்சியில் இருந்த போதிகைகள் அல்லி மலர் வடிவாய் இருந்தன. அவற்றின் உயரம் நான்கு முழம். 

20 மேலும் தூண்களின் மேலுள்ள போதிகைகளின் பின்னல்களை ஒட்டிப் புடைத்திருந்த பகுதிகளைச்15-  சுற்றிலும் தூணுக்கு இருநூறு மாதுளம் பழ வடிவங்கள் இரண்டு வரிசையில் இருந்தன. 

21 இவ்விரு தூண்களையும் தூயகத்தின் முன்மண்டபத்தின் முன் அவர் நாட்டினார். அவர் தென்புறம் நாட்டிய தூணுக்கு "யாக்கின்" என்றும் வடபுறம் நாட்டிய தூணுக்குப் "போவாசு" என்றும் பெயரிட்டார். 
1 அரசர்கள் 7:15 - 21

நிஜம்
தூண்கள் செம்பால் (Copper) செய்யபட்டது - செம்பு - பூரணமான மனிதத்தன்மையை அடையாளப்படுத்துகிறது.

உதாரணம் :- முதலில் படைக்கப்பட்டவர் ஆதாம்.

ஆதாம் என்றால் செந்நிறமண் என்று அர்த்தம்.
கடவுள் ஆதாமை படைக்கும் போது பூரண தன்மை உடையவராக படைத்தார்.
அவர் பரிபூரணம் அடையவேண்டும் என்பதற்க்காக.(GENESIS- 1:27 )

தூண் 1 - யாகீன்-
கடவுள் நிலைநிறுத்துவார்

தூண் 2 - போவாஸ் -
அது வல்லமையாய் இருக்கிறது.

இரண்டு தூண்கள் - பூரணமான மனிதத்தன்மையாக மாறப்போகிற சபைவகுப்பரை அடையாளப்படுத்துகிறது.
கடவுளின் தெய்வீக அழைப்புக்குள் வந்த
இஸ்ரயேல் மற்றம் புறஜாதி ஜனங்கள்
- (ரோமர் 1:16, ரோமர் 2:10, அப்போஸ்தலர் 13:26, 45-46 )

உயரம் 18 முழம் - என்பது புறஜாதியரை குறிக்கக்கூடிய எண்ணாக இருக்கிறது.

உதாரணம் :- 18 வருடம் நிமிரக்கூடாத கூனியை நமது ஆண்டவர் சுகப்படுத்தி இரட்சிப்பை அளித்ததை உணர்ந்துகொள்ளலாம்.
(லூக் - 13: 10-13 )

சுற்றழவு 12 முழம் - என்பது இஸ்ரயேலரை குறிக்கக்கூடிய எண்ணாக இருக்கிறது.

உதாரணம் :- 12 வருடம் பெரும்பாடுள்ள ஸ்தீரியை சுகமாக்கியது மற்றும் ஜெப ஆலயத்தலைவன் யவீருவின் மகளை நமதாண்டவர் உயிரோடு எழுப்பினது.
(லூக் - 8: 41- 44 )

அவற்றின் கனம் 4 விரற்கடையளவு என்பது விசுவாசத்திற்குப்பட்ட சபைவகுப்பர் உபத்திரவத்திற்குள் சென்றதை மற்றும் அவர்களுடைய பாடுகளை அடையாளப்படுத்துகிறது.
(அப்போஸ்தலர் 12:4)

உதாரணம் :- பேதுரு சிறைச்சலையில் இருக்கும் போது நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்தி நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்து அடைத்தனர்.

இஸ்ரயேல் ஜனங்கள் 40 வருடம் வனாந்திரத்தில் உபாத்திரவப்பட்டார்கள்.

நமக்கு,
நாம் மிகுந்த உபத்திரவங்கள் வழியாகத்தான் தூணாக மாற முடியும் என்பதை நினைவில் கொள்வோம்.

கிறிஸ்துவுக்குள்

Comments