🚩 நிழல் நிஜம் 🚩
நிழல் :
எண்ணாகமம் 15:32-36.
நிஜம் கண்டுபிடிங்கள்.
1) ஓய்வு நாளில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்,
2) அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்திற்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டு வந்தார்கள்.
3) அவனுக்கு செய்ய வேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால் அவனைக் காவலில் வைத்தார்கள்,
4) கர்த்தர் மோசேயை நோக்கி அந்த மனிதன் நிச்சயமாக கொலை செய்யப்பட வேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளையத்திற்கு புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.
உபாகமம் 5: 15
நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்பட பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.
யாத்திராகமம் 31:15,
யாத்திராகமம் 35 : 2,
நீங்கள் ஆறு நாள் வேலை செய்ய வேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாயிருப்பதாக, அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு நாள்; அதிலே வேலை செய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.
ஓய்வு நாளில் வேலை செய்யக்கூடாது என்பது தெரிந்தும் விறகு பொறுக்கினதினால், அது WILFUL SIN துணிகரமான பாவம் என்று எண்ணப்படுகிறது. WITHOUT INTENTION மனதறியாமல் செய்திருந்தால், பாவம் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
ஆனால் இங்கே தேவன் பிரமாணங்களைக் கொடுத்தும்,
With intention துணிகரமாய் பாவம் செய்து, கற்பனையை மீறியதால், கட்டளையை மீறியதால், அந்த மனிதன் கல்லெறியப்பட வேண்டும்.
ஏன் ஓய்வு நாள் பிரமாணம் ?
எகிப்திலே அடிமையாயிருந்தார்கள், அங்கேயிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்பட பண்ணின கர்த்தரை நினைக்கும் படியாக,
எகிப்தாகிய உலகக் காரியங்களிலிருந்து விடுபட்டு, தேவனுக்குரிய காரியங்களை மட்டுமே சிந்திக்கும்படியாக, செயல்படுத்துபடியாக ஓய்வு நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தேவனுக்குள்ளாக இளைப்பாறும்படியாக ஏற்படுத்தப்பட்டது ஓய்வு நாள்.
நம்முடைய இளைப்பாறுதல் நம்முடைய ஞானஸ்நானத்தில் ஆரம்பித்தது.
மத்தேயு 11:28
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
இளைப்பாறுதல்- rest, refresh, giving intermission from labor.
நமக்கு இளைப்பாறுதல் என்பது
உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்து விடுதலை கிடைக்கப்பெற்று, கிறிஸ்துவுக்குள்ளாக தேவனுடைய கிரியையாய் நாம் இருக்கிறோம்,
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக, தேவனுக்காக; நாம், நம்முடைய ஞானஸ்நானத்திலிருந்து கிரியை செய்ய ஆரம்பிப்பதே நம்முடைய இளைப்பாறுதல்.
ஆகையால் நாம் மீண்டும் உலகத்தின் காரியங்களில் அடிமைப்படக்கூடாது, அவ்வாறு அடிமைப்பட்டால் மரணம்.
எபிரெயர் 6:1-4
கிறிஸ்துவுக்குள்
ANSWER #2
எண்ணிக்கை 15:32-36⛅🌥️☁️🌩️⛈️🌧️🌨️🌤️
ஓய்வு நாள் = 1000 வருட அரசாட்சி காலம் (எபிரேயர் 4:9-11)
விறகு = சுய முயற்சி/ துஷ்ட சுபாவங்கள்
(நீதிமொழிகள் 26:21)
கொல்லப்பட்ட மனிதனுக்கு ஓய்வு நாள் கட்டளைகள் கொடுக்கப்பட்டிருந்தும், அசட்டையாய் வீணான சுய முயற்சி / எண்ணங்களால் மீறினதினால், உயிரை இழந்தான்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வரப்போகும் கிறிஸ்துவின் அரசாட்சியை பற்றிய முழு அறிவு பெற்ற பின்னும், தன் அழைப்பை அலட்சியப்படுத்தி சுயதுஷ்ட சிந்தனைகளுக்கு ஒப்பு கொடுத்தால், கடவுளோடு கூட உள்ள பனிதமான உறவு உடைபட்டு, கடவுளின் திட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்.
⛅🌥️☁️🌩️⛈️🌧️🌨️🌤️
பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சிமை உண்டாவதாக.
🙂🙏
Comments
Post a Comment