[18] DEATH IN THE POT | பானையிலே சாவு [2 KINGS 4:38-41]

அன்பானவர்களே, 🙏
 நிழல் நிஜம்

நிழல்: பானையிலே சாவு 

2 அரசர்கள் 4:38-41
38 எலிசா கில்காலுக்குத் திரும்பினார். அப்பொழுது நாட்டில் பஞ்சம் நிலவியது. இறைவாக்கினர் குழுவினர் அவர் முன் அமர்ந்திருக்கையில், எலிசா தம் பணியாளன் ஒருவனை நோக்கி, "நீ ஒரு பெரிய பானையை எடுத்து அதில் இறைவாக்கினர் குழுவினர்க்குக் கூழ் காய்ச்சு" என்றார். 

39 அப்பொழுது அவர்களுள் ஒருவன் காட்டுக் கீரை பறிப்பதற்காக வயலுக்குச் சென்றான். அங்கே அவன் பேய்க்குமட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களைத் தன் போர்வை நிறையப் பறித்துக் கொண்டு வந்தான். அவை என்னவென்று தெரியாமல், அவற்றை நறுக்கிப் பானையில் போட்டு அவன் வேக வைத்தான். 

40 பின்பு அவன் அவர்கள் உண்ணுமாறு அதைப் பறிமாறினான். அவர்கள் அந்தக் கூழை உண்ணத் தொடங்கியதும், "கடவுளின் அடியவரே! பானையிலே நஞ்சு!" என்று அலறினர். அவர்களால் அதை மேலும் உண்ண முடியவில்லை. 

41 அப்பொழுது அவர், "கொஞ்சம் மாவு கொண்டு வாருங்கள்" என்றார். அவர் அதை பானையில் போட்டு, "இவர்கள் உண்ணும்படி இதைப் பறிமாறுங்கள்" என்று சொன்னார். பானையில் இருந்தது அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. 
2 அரசர்கள் 4:38 - 41

நிஜம்:

எலிசா செய்த அற்புதங்கள் இறையாச்சியில் முற்பிதாக்கள் செய்யும் செயல்பாடுகளுக்கு நிழலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பேய்க்கொம்மட்டிக்காய்கள் --- நிலை வாழ்வுக்கு (நித்திய ஜீவன்) எதிரான உபதேசங்கள். 
(திருவெளிப்பாடு 14:18,19)

வசனங்களில் நடந்தவை யாவும் ஒருவரை நிலை வாழ்வுக்குள் நடத்தாமல் மரணத்திற்கே வழி நடத்துவதாக இருந்தது.

இறைவாக்கினர் எலிசா, கொண்டுவர சொன்ன மாவானது, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பொருளைப் பற்றிய சத்தியங்களை அடையாளப்படுத்துகிறது. 
(லேவியர் 24:5-6, யோவான் 6:51)

எப்படி மாவு, நஞ்சை நீக்கி அவர்களை மரணத்தில் இருந்து காப்பாற்றியதோ,  அது போல், கிறிஸ்துவின் மீட்கும் பொருள் பற்றிய உண்மைகள் நமக்கு வாழ்வளித்து இறையாச்சியில் நிலை வாழ்வு தரும். 

இதன் மூலமாகவே அனைத்து கள்ள உபதேசங்களும் கடவுளின் அரசாட்சியில் நீக்கப்பட்டு போகும் என்பதை இந்த வசனங்கள் குறிக்கிறது.

கிறிஸ்துவுக்குள்

Comments