கேள்வி
மனுபுத்திரனே...⚔️ பட்டயம் மூன்றுதரம் இரட்டித்து வரும்.
எசேக்கியேல் 21.14.
3 பட்டயங்களில் உள்ள ஞான அர்த்தத்தை சொல்லவும்.
பதில்
> "மானிடா! நீயோ இறைவாக்குரை; கை கொட்டு; இருமுறை, மும்முறை வாள் வீசப்படட்டும்; கொலைக்கான வாள் அது; அவர்களைச் சூழ்ந்து வரும் படுகொலைக்கான வாள் அது."
எசேக்கியல் 21:14
⚔️பட்டயம் = வாள் என்பது கடவுளின்
நியாயத்தீர்ப்பை அடையாளப்படுத்தும்.
இஸ்ரயேல் ஜனங்கள் ஜுவனுள்ள கடவுளை விட்டு தெய்வமல்லாத அந்நிய தெய்வ வணக்கத்திற்குள் செல்லும்போது அவர்களை புறஜாதி ராஜாக்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்.
அப்படியே
முதலாவது பட்டயம்⚔️ யோயாக்கீம் ராஜாவாக இருந்தபோது கி.மு 605 ம் வருடத்தில் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் முற்றுகை போட்டு தானியேலையும் அவர் நண்பர்களையும் சிறைப்பிடித்து செல்கிறார்.
2வது பட்டயம்⚔️யோயாக்கீன் ராஜாவாக இருந்தபோது கி.மு 597 ம் வருடத்தில் நேபுகாத்நேச்சார் முற்றுகை போட்டு அவரையும் எசேக்கியேல் தீர்க்கதரிசியையும் சிறைபிடித்து செல்கிறார்.
3வது பட்டயம் ⚔️
சிதேக்கியா ராஜாவாக இருந்த 11ம் வருடத்தின் போது கி.மு 587 ம் வருடத்தில் நேபுகாத்நேச்சார் முற்றுகை போட்டு ஆலயத்தை தீக்கொளுத்தி அவர்களை சிறைப்பிடித்து சென்றார்.
இதுவே இஸ்ரயேல் தேசத்தின் மீது வந்த 3 ⚔️⚔️⚔️ பட்டயங்கள்ஆகும்.
மூன்று முறை இரட்டித்து வரும் என்பது ஆங்கிலத்தில் மூன்றாம் முறை இரட்டிப்பான தண்டனை வரும் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது.
அப்படி என்றால் மூன்றாம் முறை வரும் நியாயத்தீர்ப்பு மிகவும் வேதனையானதாக இருக்கும் என்பதை குறிப்பதாக இருக்கிறது.
அதன்படி யூத ராஜ்ஜியம் கவிழ்க்கப்பட்டு தேவாலயமும் தீக்கிரையாக்கப்பட்டது.
நாமும் , தெய்வமல்லாத காரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நியாயத்தீர்ப்புகுள்ளாகுவோம்.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment