[33] THINGS THAT SHOULD NOT BE FOUND IN A PRIEST | ஆசாரியனிடத்தில் காணப்பட கூடாத காரியங்கள் [LEVITICUS 21:18-23]
அன்பானவர்களே🙏
லேவியர் 21:18-21
விளக்கவும்
பதில்:
லேவியர் 21:18 - 23
18. உடல் ஊனமுற்றவன் எவனும் அருகில் வரவேண்டாம்; பார்வையற்றவன், முடவன், குறைந்த அல்லது நீண்ட உறுப்பு உடையவன்,
19. கால் கை ஒடிந்தவன்,
20. குள்ளன், கண்ணில் பூ விழுந்தவன், சொறி சிரங்கு உடையவன், அண்ணகன் எவனும் வேண்டாம்.
21. குருவான ஆரோனின் வழி மரபில் உடல் ஊனமுற்ற எவனும் ஆண்டவரின் நெருப்புப் பலியைச் செலுத்த அருகில் வரவேண்டாம். மேலும் உடல் ஊனம் அவனுக்கு இருப்பதால், அவன் தன் கடவுளின் உணவுப் படையலைச் செலுத்தவும் வரக்கூடாது.
22. தன் கடவுளின் தூய அப்பத்தை அவன் உண்ணலாம்.
23. ஆனால் தொங்குதிரை அருகில் வர வேண்டாம்; பீடத்தை அணுக வேண்டாம். ஏனெனில், அவன் உடலில் குறைபாடு உள்ளது. என் தூயகத்தை இழிவுபடுத்த வேண்டாம். ஏனெனில் நான் அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர். "
லேவியர் 21:18 - 23
ஆரோனின் ஆசாரிய முறைப்படி, இன்று சுவிசேஷ காலத்தில்,
பயிற்சியில் இருக்கும் ஆண்டவராகிய கிறிஸ்துவின் சபை அங்கங்களாக மாற அழைக்கப்பட்டவர்கள்,
தொடர்ந்து தங்களை சுத்திகரித்தல், பலி செலுத்துதல், கடவுளின் ஐக்கியம், கடவுள் காரியங்களோடு தொடர்பு - இவைகளை மேற்கொள்ளும் பொழுது
எந்த குறைபாடுகளும் காணப்படக்கூடாது.
காரணம், இப்படிப்பட்ட குறைபாடுகளோடு ஒரு காலத்தில் நாம் இருந்த போது, நம்மை தகுதியாக்கி நீதிமானாக்கி மாபெரும் பயிற்சியை கடவுள் கொடுத்திருக்கிறார்.
அதனால் மறுபடியும் கீழ் காணும் குறைபாடுகள் காணப்படக்கூடாது.
காணப்படுமேயானால், மாபெரும் ஆசாரிய ஊழியமாகிய மெல்கிசேதேக்கின் ஊழியத்தில் அங்கமாக பங்கு பெற முடியாது.
கணப்பட கூடாத காரியங்கள்:
லேவியர் 21:18 - 20
🍁 குருடனானாலும் -
சத்தியத்தை தெளிவாக பகுத்தறியும் அறிவு வேண்டும்.
🍁 சப்பாணியானாலும்
கடவுளின் பிரமாணங்களுக்கு ஏற்றபடி செயல்படாமல் இருப்பவர்கள்.
🍁குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்
ஒழுக்கமற்ற குறைபாடுள்ள வாழ்க்கை முறை.
🍁 காலொடிந்தவனானாலும்
கடவுளின் வார்த்தைகளின் படி நடக்க முடியாதவர்கள்
🍁கையொடிந்தவனானாலும்
கடவுளின் பிரமாணத்தின் படி அர்ப்பணிக்க இயலாதவர்கள்.
🍁கூனனானாலும், குள்ளனனாலும்
சத்தியத்தில் வளர்ச்சியை நோக்கி செல்லாமல் பூமிக்குரிய இச்சையான காரியங்களில் அதிக கவனம் உள்ளவர்கள்.
🍁 பூவிழுந்த கண்ணனானாலும்
சத்தியதின் அறிவை தெளிவாய் காண இயலாதவர்கள்.
🍁 சொறியனானாலும், அசறுள்ளவனானாலும்
மாமிசத்தின் படி கிரியை செய்பவர்கள்/மாம்சீக சுபாவங்கள்.
🍁விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது
புது சிருஷ்டியாய் பிறக்கவும், பிறப்பிக்கவும் இயலாதவர்கள்
இப்படிப்பட்டவர்கள் சரியாக பலி செலுத்த இயலாது, கடவுளின் காரியங்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது, தங்களை பரிசுத்தம் செய்ய இயலாது.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment