FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[60] PIERCING THE EARS | காது குத்துதல். [EXODUS 21:5,6]


அன்பானவர்களே🙏 
யாத்திராகமம் 21:5,6
கண்டுபிடித்து விளக்கவும்!!

"அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,"

"அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டு போய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினால் குத்தக்கடவன். பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்."
யாத்திராகமம் 21:5,6

பதில்:
இங்கு வேலைக்காரன், தன் எஜமானிடத்தில் மிகுந்த அன்பும் அர்ப்பணிப்பும் கொண்டிருந்ததனால், தன் எஜமானை பிரிய மனதில்லாமல், அடிமையாக தன் எஜமானிடத்தில் தொடர்ந்து பணிபுரிய சம்மதம் தெரிவிக்கிறான்.  

எஜமான் இதற்கு அடையாளமாக அவனுடைய காதை ஒரு கம்பியினால் குத்துகிறார்.
இதன் பொருளை இப்பொழுது காண்போம். 

எஜமான்: நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து 

வேலைக்காரன்: சத்திய வசனத்தினால் ஈன்றெடுக்கப்பட்ட 144000 (திருச்சபை)
"தம் படைப்புக்குள் நாம் முதற்கனிகளாகும் படி சத்திய வார்த்தைகளினால் நம்மை ஈன்றெடுத்தார்" 
யாக்கோபு 1:18

காது குத்தல்: நம் செவியை சத்தியத்தை மட்டுமே கேட்பதற்கு அர்ப்பணித்தல்.

"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன."
யோவான் நற்செய்தி 10:27

ஆடுகள் எப்படி அதன் மேய்ப்பனின் சத்தத்தை அறிந்து, கீழ்ப்படிந்து பின் செல்கின்றனவோ அதுபோல கிறிஸ்துவின் உண்மை சீடராய் இருப்பவர்கள், அவருடைய சத்தியத்தை மட்டுமே கேட்பதற்கு தங்களை அர்ப்பணிப்பார்கள்.

கிறிஸ்துவுக்குள்

Comments