அன்பானவர்களே 🙏
நிழல் நிஜம்
நிழல் :
எஸ்தர் 2: 21 to 23.
இதில் மறைந்துள்ள நிஜத்தினை கண்டறியுங்கள்.
நிஜம்
21 மொர்தக்காய் அரசவாயிலருகில் பணிபுரிந்த நாள்களில், பிகதான், தெருசு, என்ற இருவர் சினமுற்று மன்னர் அகஸ்வோரைத் தாக்க வகை தேடினர்.
22 இக்காரியம் மொர்தக்காய்க்குத் தெரிந்தது. இதனை அவர் அரசி எஸ்தரிடம் கூற, அவர் மொர்தக்காயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார்.
23 உடனே அக்காரியம் புலனாய்வு செய்யப்பட, உண்மை வெளிப்பட்டது. அவர்கள் இருவரும் தூக்கில்லிடப்படனர். இந்நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டது.
எஸ்தர் 2:21,22,23
மொர்தெகாய் - முற்ப்பிதாக்கள்
மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது-
அரமனைக்குள் நுழையவில்லை மாறாக அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கிறார் ::
முற்ப்பிதாக்கள் யாரும் மேலான அழைப்பிற்குள் வரப்போவதில்லை - எபிரெயர் 11:39-40
அகாஸ்வேரு - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து - நீதிமொழிகள் 30:31, வெளி 17:14
எஸ்தர் - மணவாட்டி சபை - வெளி 21:2
பிக்தான் - Bigthan = (In their Wine Press) திராட்சை ரசம் செய்யும் ஆலையில் உள்ளவர் என்று அவர் பெயருக்கு அர்த்தம். - எரேமியா 51:7, வெளி 14:8
தேரேசும் - Teresh = (Strictness) கண்டிப்பு என்று அவர் பெயருக்கு அர்த்தம் - வெளி 17:12-13
இவர்கள் இருவரும் யாரை அடையாளப்படுத்துகிறார்கள் என்றால், போப் மார்க்கம்; ப்ரொடஸ்டன் அமைப்பு.
இவர்கள் நமது ஆண்டவரின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள நினைத்தார்கள், ஆனால் அது கிடைக்காமல் போனது.
அர்மகெதோனில் நியாயத்தீர்ப்பை அடைகிறார்கள்.
வெளி 18:10,16,21
முற்ப்பிதாக்கள் பரலோக ஆசிர்வாதத்திற்குள் செல்லவில்லை என்றாலும் பரலோக ஆசிர்வாதத்திற்கு செல்பவர்களாகிய சபைவகுப்பினரை தயார் படுத்துகிறார்கள்.
உண்மையான சபையின் மூலம் கடவுளின் திட்டம் நிறைவேறும்.
கிறிஸ்து சதாகாலங்களிலும் ஆளுகை செய்ய இவர்களுடைய கிரியையும் உதவியாக இருக்கும்.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment