FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[67] நிழல்/நிஜம்: கிழக்கு திசையில் பாளையமிறங்குபவர்கள் - [எண் 2:2,3]

அன்பானவர்களே 🙏
🚩 நிழல் நிஜம்🚩
🌱🪷🪷🪷🪷🪷🌱
நிழல் : 
இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.

யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும், அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். எண்ணாகமம் 2:2,3
🏮 நிஜம்🏮
இந்த காரியத்தில் இஸ்ரயேல் ஜனங்கள் பாளையம் இறங்க வேண்டிய ஒழுங்குமுறைகளையும், (எண் 2:1,2....)

அதன் பின்பு, பிரயாணப்படவேண்டிய ஒழுங்குமுறைகளையும் காண்கின்றோம். (எண் 2:34).

இஸ்ரயேல் ஜனங்கள், யாரைப் பின் தொடர்ந்து போக வேண்டுமென்றால் யூதா புத்திரர்.

யூதா, முதற்ப் பலனாகிய சபையை அடையாளப்படுத்துவார்.

ஆசரிப்புக்கூடாரமானது பொதுவாக தெய்வீகத் திட்டத்தின் காரியங்களை அடையாளப்படுத்தும்.

கிழக்கு என்பது சூரியன் உதிக்கும் திசை. 

அப்படி என்றால், கிழக்கு திசை என்பது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் (சூரியன்) மூலமாக வரக்கூடிய வாசலை/வழியை அடையாளப்படுத்தும்.

இவ்வகையில் ஆசரிப்பு க்கூடாரத்தின் (தெய்வீகத் திட்டத்தின்) அருகாமையில், ஆண்டவரின் வழிகாட்டுதலோடு (கிழக்கு திசையில்) இருப்பவர்கள் யூதா புத்திரராகிய சபை வகுப்பார் என்பது தெளிவாகின்றது. 

🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
கிறிஸ்துவுக்குள்

Comments