FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[45] THE GRINDING STONE | மாவரைக்கும் கல் - [DEUTERONOMY 24:6]

அன்பானவர்களே🙏

கேள்வி:

இணைச் சட்டம் (உபாகமம்) 24:6 வசனத்திலுள்ள இறை ஞானத்தை எப்படி புரிந்து கொள்வது?

6 மாவரைக்கும் கல்லின் கீழ்க்கல்லையாவது மேற்கல்லையாவது அடகாக வாங்காதே. அது அவன் மனித உயிரை அடகாக வாங்குவது போலாகும். (இணைச் சட்டம் 24:6)

இஸ்ரேயல் மக்களின் உணவு, அப்பம்🥯 (வாழ்வுக்கானது). அந்த அப்பமாகிய உணவு, கோதுமையை🌾 அறுவடை செய்து அதை திரிகையில் அரைத்தால் அவர்களுக்கு கிடைக்கும்.

அந்த திரிகையின் ஒரு கல்லை மட்டும் அடகு வைத்தாலும் அவர்களுக்கு உணவு(ஆகாரம்) (வாழ்வு = ஜுவன்) இருக்காது.

பனித விளக்கம்:
இஸ்ரேயல் மக்களுக்கு நம்முடைய கடவுள் 2 கற்பலகையில் கற்பனைகளைக் கொடுத்தார்.

அதை பெற்ற மக்கள், தங்களுக்கு நேரிட்ட சூழ்நிலையினிமித்தமாக பிசாசிடம் அடகு வைத்தபடியால் அவர்கள் தங்கள் நிலை வாழ்வுக்குறியவைகளை இழந்து போனார்கள்.

நமக்கு கடவுள் சொல்வது என்னவென்றால் சத்தியத்தை வாங்கு அதை விற்காதே. (நீதிமொழிகள் 23:23).

நாமும் கடவுளிடம் வாழ்வுக்காக பெற்றுக்கொண்ட சத்தியத்தை எந்த சூழ்நிலையிலும் அடகு வைக்க கூடாது.

அப்படி செய்தால் நாமும் நம் நிலைவாழ்வை (நித்திய ஜீவனை) இழந்து போவோம் என்பதனை நம் பரமதந்தை நமக்கு இந்த இறைவார்த்தை மூலமாக எச்சரிக்கிறார்.

கிறிஸ்துவுக்குள்

Comments

  1. சத்தியத்தை அடகு வைத்தல் என்றால் என்ன

    ReplyDelete
    Replies
    1. அலட்சியமாக எண்ணுதல், உதாசீன படுத்துதல் = Not bothered to lose it/ showing least importance.

      Delete
  2. GLORY TO GOD 🙏🙏

    ReplyDelete

Post a Comment