அன்பானவர்களே 🙏
🚩நிழல் நிஜம்🚩
நிழல்: ஏசாயா - 31: 1சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!ஏசாயா 31:1
நிஜம்:
இப்போது வரவிருக்கும் மகா உபாத்திரவக்காலத்தில் பெரும் சிக்கலில், "உலக யோசனைகள் மற்றும் திட்டங்களை, நாம் எவ்வாறு செயல்படுத்தக்கூடாது என்பதற்கான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகிய நமக்கான பாடம் இதில் உள்ளது.
எகிப்து🔷 உலகத்தைக் குறிக்கின்றது. (I யோவான் 2:17, சங்கீதம் 45:10)
குதிரைகள் 🔷 உலகத்தில் இருக்கின்ற தவறான போதனைகளை குறிக்கின்றது. (கொலோசெயர் 2:23, எபிரெயர் 13:9)
இரதங்கள் 🔷 உலகத்தில் இருக்கக்கூடிய அமைப்புகளை குறிக்கின்றது. (சகரியா 12:4)
குதிரை வீரர்கள் 🔷 உலகத்தில் இருக்கக்கூடிய தவறான போதனையில் உள்ள பெரிய தலைவர்களை குறிக்கிறது. (I தீமோத்தேயு 1:7)
ஆவிக்குரிய இஸ்ரவேலுக்கான பாடம்:-
பழைய தவறான கோட்பாட்டு பொழுதுபோக்குகளில் சவாரி செய்ய இன்னும் அநேகர் முயற்சி செய்கிறார்கள்.
உலகத்தை பார்க்கும் போது அதனுடைய போதனைகளும் அதனுடைய செயல்பாடுகளும் மிகவும் பாராக்கிரமாகவும் இருந்தாலும் தேவனுடைய பிள்ளைகள் அதை நம்பி போகாமல் நம்மை பரிசுத்தம் படுத்தின கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இதனுடைய நிஜமாக இருக்கிறது.
இக்கட்டான காலத்தில் கடவுளிடம் மட்டுமே பாதுகாப்பும் வெற்றியும் இருக்கிறது
வெளி 19:18
ஓசியா 1:7 யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.
🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment