[26] 33 days for a male child and 66 days for a female child. Why? | ஆண் பிள்ளைக்கு 33, பெண் பிள்ளைக்கு 66 நாட்கள். ஏன்? [LEVITICUS 12:4-5]
அன்பானவர்களே🙏
கேள்வி : லேவியராகமம் 12:4-5
ஸ்திரியானவள் ஆண் பிள்ளையை பெற்றெடுத்தால் ஏன் 33 நாட்கள் சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும்?
ஸ்திரியானவள் பெண் பிள்ளையை பெற்றெடுத்தால் ஏன் 66 நாட்கள் சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும்?
லேவியராகமம் 12:4-5
இதின் ஞானம் என்ன??
பதில் :
ஸ்திரியானவள்:
சபை என்கிற தகுதிக்குள்ளாக அழைக்கப்பட்டவர்கள்.
Revelation 12:1, Luke 15:8
ஆண் பிள்ளையை பெற்றெடுப்பது:
பலமுள்ள ஒரு நிலையை வெளிப்படுத்தும்.
பெண் பிள்ளையை பெற்றெடுப்பது:
பலவீனம் உள்ள ஒரு நிலையை வெளிப்படுத்தும்.
33 - நம் ஆண்டவரின் வயதை நேரடியாகக் குறிக்கின்றது.
அப்படி என்றால் அது நம் ஆண்டவரின் பரிசுத்தமான வாழ்க்கையை குறிக்கும்.
66 - என்பது - 33 - ன் இரட்டிப்பு.
முதலில் இது ஸ்திரியையும் அவரது சுத்திகரிப்பையும் குறித்து பேசுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சபை அழைப்பில், பலமுள்ளவர்கள் பலவீனமுள்ளவர்கள் என்கிற இரண்டு நிலையில் இருப்பார்கள் என்பது தெரியும் - Romans - 15:1
ஸ்திரியானவள் - ஆண் பிள்ளை - பலமான நிலை - ஆண்டவருடைய வாழ்க்கையில் (33) சீராக தொடர்ந்து நடக்க வேண்டும்.
ஸ்திரியானவள் - பெண் பிள்ளை - பலவீனமான நிலை - ஆண்டவருடைய வாழ்க்கையை (33) வாழ்வதில் அதிக (66) பிரயாசப்பட வேண்டும்.
மேலும் சிறப்பான கருத்துக்களை வரவேற்கின்றோம்.
கிறிஸ்துவுக்குள்
Very good explanation. Thank you Bro
ReplyDelete