🚩நிழல் நிஜம்🚩
கேள்வி
🌱🪷🪷🪷🪷🪷🌱
1️⃣ ஆதி 49:13:
நிஜம் - ஆதி 49:13
13 செபுலோன், கடற்கரையில் வாழ்ந்திடுவான்; அவன் கப்பல் துறையில் இருந்திடுவான்; அவனது எல்லை சீதோன் வரை பரவியிருக்கும்.
தொடக்கநூல் 49:13
செபுலோன் - யாக்கோபின் பத்தாவது குமாரன், லேயாளின் ஆறாவது மகன்.
கடலின் அருகே வாசம் பண்ணுவார்.
கப்பல் வந்து தங்கக்கூடிய இடமாகிய துறைமுகம் போல செபுலோன் இருப்பார்.
செபுலோன் - வாசம்பண்ணுதல்.
யாக்கோபு - ஆபிரகாமின் உடன்படிக்கைக்கு அடையாளம்.
அப்படியென்றால், உடன்படிக்கையின் கீழ் வந்தவர்கள் எப்படி இருப்பார்கள் (வாசம் பண்ணுவார்கள்) என்பது இங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது,
ஜனங்களின் மத்தியில்(கடலருகே - ஏசாயா 57:20), கப்பல்கள்(விசுவாசம் 1 தீமோ 1:19 ) தங்கும் இடமாகிய துறைமுகம்(பரலோக அழைப்பு - சங் 107:30, எபேசி 2:7) போல் இருப்பார்கள்.
🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment