அன்பானவர்களே🙏
🌱 🌱
🧙♂️ யார்🪖
மீகா 5:1-2
அரண்சூழ் நகரில் வாழும் மக்களே! உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது; இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.
நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர்; உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.
மீக்கா 5:1,2
முதலில் கவனிக்க வேண்டியது,
மீகா தீர்க்கதரிசி அசீரிய சாம்ராஜ்ஜியத்தின் காலத்தில் வாழ்ந்தவர்.
அவர் ,
அடுத்து வரவிருக்கும் எருசலேமின் அழிவைக் குறித்தும், விடுதலையைக் குறித்தும்,
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இராஜாவாகிய மேசியாவை குறித்தும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.
இஸ்ரயேலர்கள் பாபிலோன் இராஜாவால் சிறைப்பிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்குள்ளாவார்கள் என்பதை முன் அறிவிக்கிறார்.
மீகா 4:10
அதன் தொடர்ச்சியாக,
மீகா 5:1 - ல், எருசலேம் முற்றுகையிடப்பட்டு, யூதாவின் கடைசி ராஜாவாகிய சிதேக்கியா அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவார் என்பதை முதலாம் வசனம் காண்பிக்கின்றது.
இஸ்ரயேலின் நியாயாதிபதி:- சிதேக்கியா ராஜா.
இது BC 587 ஆம் வருடம் நடந்த சம்பவத்தை காண்பிக்க கூடிய வசனம்.
மீகா 5:2 -
இஸ்ரயேலை ஆளப்போகும் உலக இரட்சகரின் பிறப்பை குறித்து முன் அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனம்.
இந்த முதலாம் வசனத்திற்கும் இரண்டாம் வசனத்திற்கு வெகு காலங்கள் வித்தியாசங்கள் உள்ளன.
ஆகவே வசனங்களில் மறைந்துள்ள பொருள் ஒரே கோர்வையாக சில இடங்களில் எழுதப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment