FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[12] எப்சிபா/ பியுலா [ஏசாயா 62:4]

அன்பானவர்களே🙏 
🏮கேள்வி🏮
ஏசாயா 62:4
நீ எப்சிபா  என்றும், உன் தேசம் பியுலா என்றும் சொல்லப்படும்.
விளக்குக!

பதில்- 
எப்சிபா என்பதின் அர்த்தம் :-  To Marry" 🤵🏻‍♂️👰🏻‍♀️- மணமுடிக்கப்படுவாய்

பியுலா என்பதின் அர்த்தம்   :-  My Delight is in Her" - என் மகிழ்ச்சி அவளில் உள்ளது

எப்சிபா என்று இங்கு தேவன் யூதா 🧑🏻‍🤝‍🧑🏼🧑🏻‍🤝‍🧑🏼👨‍👩‍👧‍👦 ஜனத்தினை அழைக்கின்றார்.

காரணம் :- தற்போது தேவன் அவர்களை தள்ளிவிட்டார், கைவிட்டு விட்டார் . புலம்பல் 4:5, எசேக்கியேல் 30:7,எசேக்கியேல் 15:8

ஏன் தேவன் யூதா ஜனங்களை கைவிட்டார் என்று பார்க்கும்போது பிதாவாகிய தேவன் அவர்களுக்கு மணவாளனாக 🤵🏻‍♂️💍 இருந்தார். 
(ஏசாயா 54:5, எரேமியா 3:14) 
ஆனால் அவர்கள் தேவனை விட்டு அந்நிய தேவர்களை வழிபட்டத்தினிமித்தம் (எரேமியா 4:30-31).
 
தேசம் பியுலா என்று இங்கு தேவன் எருசலேம் ⛪ 🌆 நகரத்தினை அழைக்கின்றார்.

காரணம் :- தற்போது யூத ஜனங்கள் செய்த அக்கிரமத்தின்நிமித்தம் தேவன் எருசலேமையும் அதாவது தேசத்தையும் தண்டித்தார்.
ஏசாயா 64:10, எரேமியா 4:27, எரேமியா 34:22, புலம்பல் 1:4, எசேக்கியேல் 15:8, எசேக்கியேல் 30:7, புலம்பல் 5:18, சகரியா 7:14

அந்த இரண்டு நிலைமையினையும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் 1000 - ஆண்டு அரசாட்சியில் மாற்றப்போகிறார் என்பதினை அடையாளமாக இங்கு யூதா ஜனங்களை எப்சிபா என்றும், தேசம் பியுலா என்றும் அழைக்கிறார்.

பிதாவாகிய தேவன் அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்வார், அவர்கள் தேவனிடம் மீண்டுமாக வந்து சேர்வார்கள் அப்போது தேவனுடைய வழியில் நடக்கும்போது அவர்களில் மகிழ்ச்சியாய் இருப்பர் என்பதினை அடையாளபடுத்தவே அப்படி சொன்னார். தானியேல் 9:17, எசேக்கியேல் 36:34-35, எரேமியா 32:43 

கிறிஸ்துவுக்குள்🙏🏻

Comments