[36] EZRA'S READING OF THE LAW AT THE WATER GATE | எஸ்ரா தண்ணீர் வாசலில் நியாய பிரமாண வாசிப்பு [NEHEMIAH 8:1,2]
அன்பானவர்களே 🙏
நிழலும் நிஜமும்
நிழல்
நெகேமியா 8:1,2
தண்ணீர்வாசலில் வேதபாரகனாகிய எஸ்ரா நியாயப்பிரமாண திருநூலை வாசித்தார்.
நிஜம் :
நெகேமியா 8:1 & 2
1 மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு திருநூல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர்.
2. அவ்வாறே ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார்.
3. தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.
3. தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.
எஸ்றா மற்றும் நெகேமியா இருவரின் வேலைகளும் சுவிசேஷ யுகத்தின் அறுவடை காலத்தில் நடக்கும் வேலைகளை அடையாளப்படுத்துவதாக இருக்கிறது.
வேதபாரகனாகிய எஸ்றா 7-ம் மாதம் பாபிலோனில் இருந்து வந்தது - அனேக குழப்பமான உபதேசத்தின் மத்தியில் இருந்து வெளியே வெளிச்சத்திற்கு வந்த 7-ம் சபையின் தூதரை அடையாளப்படுத்துகிறார்.
நெகேமியா அரண்மனையில் இருந்து வந்தார்- இந்த காரியம் பரலோகத்திலிருந்து வந்த நம் ஆண்டவரின் இரண்டாம் வருகையை அடையாளப்படுத்துகிறது.
தண்ணீர் வாசல் - சத்தியத்தை அடையாளப்படுத்துகிறது
வேதபாரகனாகிய எஸ்றாவை அழைத்து வரச் சொல்லி 7-ம் மாதம் முதல் தேதியிலே நியாயப்பிரமாணத்தை வாசிக்க சொன்னது - நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 7- ம் சபையின் துவக்கத்தில் ஏழாம் சபையின் தூதன், மூலம் சபைக்கு சத்தியத்தின் காரியங்களை வெளிப்படுத்தினதை இது குறிப்பதாக இருக்கிறது.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment