FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[39] THE TWO JOURNEYS OF THE ISRAELITES | இஸ்ரயேல் மக்களின் இரண்டு பயணங்கள்



அன்புடையீர் 🙏

🪐🪐இன்று ஒரு தகவல்🪐🪐 

இஸ்ரயேல் மக்கள் இரண்டு முறை அடிமைத்தனத்திலிருக்கும் பொழுது நம்முடைய பிதாவாகிய கடவுள், அவர்களை மீட்டு அவர்களது சொந்த நாட்டிற்கு வழிநடத்தி சென்ற இரண்டு விதமான பயணங்களை இந்த பதிவில் காணுவோம்..
முதல் பயணம்: israelites two journey எகிப்திலிருந்து ஆசிர்வாதமாய் கொடுக்கப்பட்ட கானான் தேசத்திற்கு சென்ற பயணம்
அடிமைத்தனத்தில் இருந்த காலம் : 
215வருடங்கள்
பயணித்த காலம் : 
40 வருடங்கள்
திரும்பினவர்கள் : ஏறக்குறைய 24 லட்சம் பேர்
வழிநடத்திய கடவுளின் பிள்ளைகள் : 
மோசே, ஆரோன் மற்றும் யோசுவா
நோக்கம் :
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சொந்தமாக்குதல்
எதிர்கொண்ட சிக்கல்கள் : 
செங்கடல், பாலைவனம், மற்றும் படையெடுப்புகள்.
அனுபவித்த தோல்விகள்: 
குற்றம்ச்சாட்டுதல், முறுமுறுப்பு, கீழ்ப்படியாமை, அவிசுவாசம், ஒரு தலைமுறையினரின் மரணம்.
கிடைத்த வெற்றி : 
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டை அடைந்தது.
கற்றுக்கொண்ட பாடங்கள் :
கடவுள் நீதியும் உண்மையும் உள்ளவர், அவர் தமது மாபெரும் திட்டங்களை, கொடுத்த வாக்குத்தத்திற்க்கு ஏற்ப நிறைவேற்றுவார்‌‌ என்பதை புரிந்துகொண்டது.

இரண்டாவது பயணம்: பாபிலோனியிலிருந்து வாக்குதத்தத்தின்படி கடவுள் கொடுத்த நாட்டை திரும்ப கட்டி எழுப்புவதற்கு
அடிமைத்தன ஆண்டுகள் : 
49 வருடங்கள்
வழிநடத்திய கடவுளின் பிள்ளைகள் : 
செருபாபேல், எஸ்றா மற்றும் நெகேமியா
நோக்கம் : 
இழந்துபோன நாட்டை திரும்ப கட்டுதல்
எதிர்கொண்ட சிக்கல்கள் : 
இடிபாடுகள், ‌ குறைவான வசதி, பகைவரின் எதிர்ப்புகள்.
அனுபவித்த தோல்விகள் : 
பயம், சோர்வு, அசட்டை‌
அடைந்த வெற்றி : எருசலேம் தேவாலயத்தையும் மதிலையும் புதுப்பித்துக் கட்டியது.
கற்றுக்கொண்ட பாடங்கள் : 
உடன்படிக்கையை மறவாத கடவுள் இடிபாடுகள் மத்தியிலும், இரக்கம் பாராட்டி, அவருடைய திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றுவார் என்பதே
📓 📓 📓 📓 📓 📓 📓
கிறிஸ்துவுக்குள்

Comments