FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[57] புறஜாதிகளை முற்றிலுமாக ஜெயிக்க ஏன் யோசுவா அனுமதிக்கபடவில்லை? [நியாயாதிபதிகள் 2 : 21-23]

அன்பானவர்களே🙏
🌀காரணம் என்ன?🌀

1️⃣ புறஜாதிகளை முற்றிலுமாக யோசுவா ஜெயிக்க ஏன் அனுமதிக்கப்படவில்லை?

நியாயாதிபதிகள் 2 : 21-23
அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியை கவனித்தது போல, அவர்கள் கர்த்தருடைய வழியில் கவனித்து நடக்கும்படிக்கு, அதை கவனிப்பார்களோ இல்லையோ என்று புறஜாதிகளைக்கொண்டு சோதிப்பதற்காக அப்படி செய்வேன் என்றார். 

2️⃣ பாவங்களில் முன்னேறின போதும் யூதாவை அழிக்காமல் ஏன் தேவன் விட்டு வைத்தார்? 
ஏனென்றால் தாவீதினிமித்தம் எருசலேம் நகரத்தினிமித்தம் தேவன் அழிக்காமல் விட்டு வைத்தார்.

1 இராஜாக்கள் 11:32, 34,36
நான் தெரிந்து கொண்டவனும், என் கற்பனைகளையும், என் கட்டளைகளையும் கைக்கொண்ட வனுமான என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்,
என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்து கொண்ட நகரமாகிய எருசலேமிலே,
என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமானுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.

3️⃣ நாங்கள் இத்தனை வருடங்கள் வனாந்தரத்திலே நடத்தப்பட்டதன் காரணம் உங்களுக்கு தெரியுமா?
எண்ணாகமம் 13:25
எண்ணாகமம் 14 : 2, 3, 31, 32, 33

கொள்ளையாவார்கள் என்று அவர்கள் சொன்ன குழந்தைகளைக் கானான் தேசத்துக்குள் பிரவேசிக்கச் செய்யவும் ;இஸ்ரயேல் சபையார் கானான் தேசத்தை அசட்டைபண்ணினதினால் அவர்களுடைய பிரேதங்கள் வனாந்தரத்தில் விழவும்,
அவர்களுடைய பிரேதங்களோ இந்த வனாந்தர த்தில் விழுந்து தீரும் மட்டும், அவர்களுடைய பிள்ளைகள் 40 வருஷம் வனாந்தரத்தில் திரிந்து, அவர்கள் பிதாக்கள் சோரம் போன பாதகத்தை சுமப்பார்கள். 
( தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கவில்லை ).

4️⃣ வெகு சீக்கிரத்தில் கானானை எங்களால் அடைந்திருக்க முடியும் ஆனால் ஏன் எங்களை வெகு தூரம் நடத்தி கொண்டு போனார்?

யாத்திராகமம் 13 : 17, 18
பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின், ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி, பெலிஸ்தரின் தேசவழியாய் போவது சமீபமானாலும்; தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல் சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப்போக பண்ணினார்

 கிறிஸ்துவுக்குள்
🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

Comments