FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[70] Q&A குஷ்டரோகி/ 100 க்கு அதிபதி யின் வேலைக்காரன்

அன்பானவர்களே🙏
💧கேள்வி💧
🌸 நமது ஆண்டவர் மலையிலிருந்து இறங்கின பின்பு 2 அற்புதங்கள் செய்தார்.
1.குஷ்டரோகியை குணமாக்குகிறரார்.
2.நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை குணப்படுத்துகிறார்.
(மத்தேயு 8(1-10).

இந்த வகுப்பார் யார் என்பதின் ஞான அர்த்தத்தை சொல்லவும்.

பதில்

முதலில்,
அந்த இருவரும், ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள்.

நமது ஆண்டவர் மலையிலிருந்து வருவது, அவர் பிதாவினிடத்திலிருந்து இந்த பூமிக்கு வந்த முதலாம் வருகையை அடையாளப் படுத்துகிறது (யோவான் 8:23,42)

1.முதல் அற்புதம், குஷ்டரோகத்தால் (பாவத்தால்) அடையாளம் மாறி இருந்த இஸ்ரயேல் ஜனங்களில், தன்னை விசுவாசித்தவர்களை குணமாக்கினார்/பாவத்திலிருந்து மீட்டுக் கொள்வதை அடையாளப்படுத்துகின்றது.
.
2.இரண்டாம் அற்புதத்தில், தன்னை விசுவாசித்த புறஜாதிகளையும் பாவத்திலிருந்து மீட்டுக் கொள்வதை அடையாளப்படுத்துகின்றது.

நாமும் 
அவர் மீது நம்பிக்கை வைத்து, விசுவாசத்தின் மூலம் அவரிடத்தில் முழுமையாக நம்மை ஒப்புக் கொடுக்கும் பொழுது நம்மையும் அவர் முழுமையாக விடுதலையாக்குவார்.

கிறிஸ்துவுக்குள்

Comments