FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[51] THE PLEDGE OF EPTAH | יפתּח (யிஃப்தாஹ்) | இப்தாவின் உறுதிமொழி [JUDGES 11:30-40]

அன்புடையீர்🙏
நிழலும் நிஜமும்

நிழல்: நீதித்தலைவர்கள் 11:29 - 40
29 ஆண்டவரின் வல்லமை இப்தாவுக்கு அருளப்பட்டது. அவர் கிலயாதையும், மனாசேயையும் கடந்து, கிலயாதிலிருந்த மிஸ்போவைக் கடந்து, அங்கிருந்து அம்மோனியரை நெருங்கினார்.

30 இப்தா ஆண்டவருக்கு ஒரு நேர்ச்சை செய்தார். "நீர் அம்மோனிய மக்களை என் கையில் ஒப்புவித்தால்,

31 அவர்களிடமிருந்து நான் வெற்றியோடு திரும்பும் பொழுது யார் என்னைச் சந்திக்க என் வீட்டு வாயிலிலிருந்து புறப்பட்டு வருகின்றாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரைக் கொண்டு வந்து எரி பலியாக்குவேன். "

32 இப்தா அம்மோனியருடன் போரிடச் சென்றார். ஆண்டவர் அவர்களை அவர் கையில் ஒப்புவித்தார்.

33 இப்தா அரோயேரிலிருந்து மின்னித்து அருகாமை வரை இருபது நகர்களையும், ஆபல்-கெராமிம் வரை இருந்த பகுதிகளையும் அழித்தார். இஸ்ரயேல் முன்னிலையில் அம்மோனியர் அடக்கப்பட்டனர்.

34 இப்தா மிஸ்பாவிலிருந்து தம்வீடு திரும்பினார். இதோ! அவர் மகள் மேளதாளத்துடன் நடனமாடிக் கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டு வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள். அவருக்கு வேறு மகனோ மகளோ இல்லை.

35 அவர் அவளைப் பார்த்தார்; தம் உடைகளைக் கிழித்துக் கொண்டு, "ஐயோ! என் மகளே! நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே! நீ என்னைத் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாயே! நான் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே! அதை நான் மாற்ற முடியாதே!" என்றார்.

36 அவள் அவரிடம், "அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார்" என்றாள்.

37 அவள் தந்தையிடம், "என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்" என்றாள்.

38 அவர், "சென்று வா" என்று சொல்லி அவளை இரண்டு மாதங்களுக்கு அனுப்பி வைத்தார். அவள் தன் தோழியருடன் சென்று தன் கன்னிமை குறித்து மலைமீது துக்கம் கொண்டாடினாள்.

39 இரண்டு மாதங்கள் முடிந்தபின் அவள் தன் தந்தையிடம் வந்தாள். அவர் தாம் செய்திருந்த நேர்ச்சையின்படி அவளுக்குச் செய்தார். அவள் ஆணுறவு கொள்ளவே இல்லை.

40 அன்று முதல் இஸ்ரயேல் மகளிர் ஆண்டுதோறும் நான்கு நாள்கள் கிலயாதைச் சார்ந்த இப்தாவின் மகளுக்காகத் துக்கம் கொண்டாடுவது இஸ்ரயேலில் வழக்கமாயிற்று.
நீதித்தலைவர்கள் 11: 29 - 40

நிஜம்
இப்தா / யெப்தா= பொருத்தனை செய்கிறார்.
அதில் இரண்டு அம்சங்கள் உள்ளது.

1. யுத்தத்தில் வென்று திரும்பி வரும்போது அவரைச் சந்திப்பது எதுவோ அது கடவுளுடையதாக இருக்க வேண்டும், அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
உதாரணம் :- சாமுயேல் பிறக்கும் முன்பு அன்னாள் அர்ப்பணித்ததைப் போல, என்றென்றும் அவருடைய சேவைக்காக பிறந்தார். (1 சாமுயேல் 1:11)

2. யெப்தா தாமே அதை எரிபலியாக கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துவார்.

"மனிதர்களை பலி செலுத்துவது நியாயப்பிரமான சட்டத்தால் தடை செய்யப்பட்டன (உபாகமம் 12:30);
ஆசாரியர்கள் அவற்றைப் பலியிட மாட்டார்கள். அப்படி ஒரு செயல் மிகவும் இழிவானது, மற்றும் செய்திருக்க முடியாது.

யெப்தா தனது மகளை முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணிப்புள்ளவளாக முற்றும் ஒப்புக்கொடுத்து முடித்தார்.

நிரந்தர கன்னித்தன்மைக்கு ஒப்புக்கொடுத்தார்;
'அவள் தன் கன்னித்தன்மையைக் குறித்து புலம்பப் போனாள்;' ஒவ்வொரு வருடமும் அவளுடன் துக்கம் அனுசரிக்க பெண்கள் சென்றார்கள்.

யெப்தா செய்த பொருத்தனைப்படி, 'அவள் எந்த மனிதனையும் அறியவில்லை.' அதாவது திருமணம் செய்துகொள்ளவில்லை.

இப்படி யெப்தா தன் மகளை கடவுளுக்கென்று ஒப்புக்கொடுத்தாரே தவிர பலி செலுத்தவில்லை.

பொருள்
யெப்தா = சபை (ஆணையிட்டதில் தவறாதவள்)

நாம், யெப்தாவாக இருக்கும் பொழுது நாம் செய்த பொருத்தனை எப்படி பட்டதாக இருக்க வேண்டுமென்றால்...
என் கண்களுக்கு முன்பாக முதலில் எது வருகிறதோ - அதை பலியாக செலுத்துகிறேன் என்பதுதான்.

கிறிஸ்துவுக்குள்

Comments

Post a Comment