FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[43] 430 வருடங்கள் இடைவெளி எதற்கு? ஏன்?

அன்பானவர்களே🙏
📚 ஏன்? என்ன?📚 
கேள்வி:
பழைய ஏற்பாடு
🌑
🌑
புதிய ஏற்பாடு 

எவ்வளவு காலம் இடைவெளி? - 430 வருடங்கள். 
ஏன்? என்ன நடந்தது?

பதில்:
முதலில் நாம் கவனிக்க வேண்டியது, 

மல்கியா முதல் மத்தேயு வரை, சொல்லும்படியான ஒரு தீர்க்கதரிசியையோ, ஆசாரியரையோ (அ) இராஜாவையோ தேவன் விசேஷ விதமாக முன்பு ஏற்படுத்தியது போல ஏற்படுத்தவில்லை..

ஆனாலும் தேவனுடைய வல்லமையும், வழி நடத்துதலும் செயல்பட்டதை மக்கபேயர்கள் சம்பவத்தின் மூலம் காண முடியும்.

சரி, ஏன் கொடுக்கவில்லை? 
இப்பொழுது தீர்க்கதரிசி தேவையில்லை.. 
ஆனால் தீர்க்கதரிசனம் தேவை. 

இது ஏற்கனவே தேவன் சொல்லிய தீர்க்கதரிசனங்களின் நிறைவுறுதலின் ஒரு காலப்பகுதி என்று கூறுவது சிறந்தது. (தானியேலில் சொல்லப்பட்ட காரியங்கள்).

மல்கியா அவர்கள் கடைசி தீர்க்கதரிசி. ஆனால் மல்கியா தீர்க்கதரிசன புத்தகம் கடைசி புத்தகமாக சேர்க்கப்பட்டது.

எஸ்றா, நெகேமியா, ஆகாய், மல்கியா இவர்களை கவனிக்கும் பொழுது, இவர்களுடைய எபிரேய எழுத்துக்களும், இவர்கள் சார்ந்து எழுதின காரியங்களும் சில இடங்களில் ஒரே விதமாக இருப்பதை உணர முடியும் ( உதா: ஆகாய் 1:14,2:21, நெகேமியா 5:14, மல்கியா 1:8)

மல்கியா புத்தகத்தின் துல்லியமான காலம் அறிந்து கொள்வது சிரமம். 

ஆனாலும் நெகேமியாவின் காலப்பகுதியை கவனிக்கும் பொழுது ஏறக்குறைய BC 432 - ல் மல்கியா தேவ வார்த்தைகளை சொல்லி இருக்க முடியும்.

அப்படி என்றால் நம் ஆண்டவரின் பிறப்பை குறித்து சொல்லப்பட்ட காலப்பகுதி BC -2, இவ்வகையில் இடைப்பட்ட காலப்பகுதி 430 வருடங்கள்.

 கிறிஸ்துவுக்குள் 

Comments