FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[80] கள்ளத்தராசு & சுமுத்திரையான நிறைகல். [PROVERBS 11:1]

அன்பானவர்களே🙏
⚖️கேள்வி🪨
கள்ளத்தராசு & சுமுத்திரையான நிறைகல்.
நீதிமொழிகள் 11:1
இதில் மறைந்துள்ள ஞானத்தை ஊற்றுங்கள்🌱

ஞானம் :- 

⚖️ கள்ளத்தராசு - (A False Balance) ⚖️
தராசு என்பது நீதியும் நியாயமும் ஆகும். 

தராசு அளக்கக்கூடிய ஒரு பொருள் அது எப்போதும் சமநிலையானதாக இருக்கவேண்டும்.

அதை சரியாக பயன்படுத்துவது என்பது நேர்மையாக இருப்பதற்கு சமம்.

ஒரு வியாபாரம் செய்பவருக்கு நேர்மை அவசியம், ஆனால் அநேகர் அப்படி இருப்பதில்லை - ஓசியா 12:7

அதுவே கள்ளத்தராசு என்பது நேர்மையற்றது அது கர்த்தருக்கு அருவருப்பானது
கள்ளத்தராசு வைத்திருப்பவர்கள் சுத்தமுள்ளவர்கள் அல்ல - மீகா 6:11

உபாகமம் 1:17 & லேவியராகமம் 19:15

🪨 சுமுத்திரையான நிறைகல்(A Just Weight)  - Perfect Stone🪨
தேவன் இஸ்ரயேல் ஜங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்க்காக இதை கட்டளையிட்டுள்ளார் - லேவியராகமம் 19:36, எசேக்கியேல் 45:10

ஒவ்வொரு செயலையும், வார்த்தையையும் மிகவும் நீதியாகவும், நியாயமாகவும் செயல்ப்படுத்துவது மட்டுமல்லாமல், "ஒவ்வொரு எண்ணத்தையும் தேவனுடைய விருப்பத்திற்குக் கீழ்படுத்த வேண்டும்."  
2கொரிந்தியர் 10:4-5

நாம் எந்த சூழ்நிலையிலும் நேர்மை உள்ளவர்களாக நீதியும், நியாயமுமாய் இருக்கவேண்டும் என்றே தேவன் விரும்புகிறார். - லேவியராகமம் 19:35-36, யாக்கோபு 2:9, I தெசலோனிக்கேயர் 2:10-12

1 தெச 4:6: "இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற் றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்."

கிறிஸ்துவுக்குள்

Comments