அன்பானவர்களே 🙏
🚩நிழல் நிஜம்🚩
நிழல் :
லேவி: 23 அதிகாரம், வசனங்கள் 10,11,16,17 மற்றும் 34.
நிஜம்
வருஷத்தில் மூன்றுதரம்
புளிப்பில்லாத
அப்பப்பண்டிகையிலும்,
வாரங்களின் பண்டிகையிலும்,
கூடாரப்பண்டிகையிலும்,
உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
உபாகமம் 16:16
புளிப்பில்லா அப்பப் பண்டிகை
நிசான்16 ம் தேதி வாற்கோதுமையின் முதற்பலனாகிய கதிரை ஆசாரியன் அசைவாட்டக்கடவன். இது நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு அடையாளமாக இருக்கிறது.
(1 கொரி 15:20).
வாரங்களின் பண்டிகை
இது நிசான் மாதம் 16 ம் தேதி தொடங்கி சீவான் மாதம் 6ம் தேதியன்று 50 வது நாளாக கணக்கிடப்படுகிறது.
இந்நாளில் முதல் பலனாகிய கோதுமையிலிருந்து இரண்டு புளிப்புள்ள அப்பங்களை ஆசாரியன் கர்த்தருக்கென்று அசைவாட்ட வேண்டும்.
இந்த அப்பங்கள் கிறிஸ்துவின் மீட்கும் பொருளினால் அங்கீகரிக்கப்பட்ட வகுப்பாரைக் (யூதர்கள் மற்றும் புறஜாதியார்) குறிக்கிறது.
( லூக் 24:49).
கூடாரங்களின் பண்டிகை
இது புளிப்பில்லா அப்ப பண்டிகையிலிருந்து சரியாக ஆறு மாதங்களுக்குப் பின்பு அதாவது ஏழாம் மாதம் (திஸ்ரி) 15 ம் தேதி துவங்கியது. இது மனக்குலமானது 6000 வருடங்களாக விழுந்து போன நிலைமையிலிருந்து மீண்டு வரப்போகும் இரட்சிப்புக்கான திட்டத்தை காண்பிக்கிறது.
இது முதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்பட கடவது
(சங்கீதம் 113:2)
🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment