அன்பானவர்களே 🙏
🚩நிழல் நிஜம்🚩
நிழல்:
பூண்களை கண்டுபிடித்து, வரைந்து, விவரங்களை சேகரித்து நிஜம் கூறவும்.
நிஜம்:
பூண்கள்: யாத் 27:10
பூண்கள் என்பது மரத்தால் செய்யப்பட்ட இரு தூண்களை சேர்க்கும் ஒரு வெள்ளி இணைப்புக் கம்பி.
தூண்கள் மரத்தால் செய்யப்பட்டு இருக்கும்.
அவைகள் நிற்பது தாமரத்தினாலான பாதத்தில்.
மரத்தினாலான தூண் தாமிர கட்குழியில் (Copper Base) நிறுத்தப்பட்டது என்பது......பாவ நிலையில் இருந்தாலும் அவர்கள் நின்று கொண்டு இருப்பது மனித பூரண நிலையில் என்பதை குறிக்கிறது.
இது விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலை அடையாளப்படுத்தும்.
நீதிமானாக்கப்பட்ட நம் ஒவ்வொருவரையும் இணைத்து ஒரே நிலையில் நிற்க வைப்பது வெள்ளி பூண்களாகிய (கம்பி) சத்தியம் மட்டுமே.
வாசிக்க...
17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.
யோவான் 17:17
16 அவரால்தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசை நார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது.
எபேசியர் 4:16
🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment