FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[84] கடவுளால் காப்பாற்றப்பட்டவர்கள்

👨‍👩‍👦‍👦 விசுவாச குடும்பத்தாருக்கு 🙏🏼
இன்று ஒரு தகவல் 📨 அறிந்து கொள்வோம்
🙇‍♂️ பைபிளில் கடவுளால் ஏற்ற சூழ்நிலையில் காப்பாற்றப்பட்டவர்களின் பெயர்கள் 🙇‍♂️

1) இஸ்மயேல்
சாராள்,  ஆகார் மகனாகிய இஸ்மயேலை புறம்பே தள்ளச் சொன்னார். 
ஆதி 21 : 10

கடவுள் இஸ்மவேலை ஏற்ற வேளையில் காப்பாற்றினார்
ஆதி 21 : 18

2) யாக்கோபு
ஏசா தன் சகோதரனாகிய யாக்கோப்பை கொலை செய்ய முயன்றார் 
ஆதி 27 :41

கடவுள் யாக்கோப்பை காப்பாற்றியது மட்டுமல்லாமல் ஏசாவின் மனதை மாற்றி ஏசா யாக்கோபு சமாதானத்தோடு திரும்பினார்கள்
ஆதி 33 :5

3) யோசேப்பு
யோசப்பின் சகோதரர்கள் யோசப்பின் மீது வெறுப்பை காட்டினார்கள் 
ஆதி 37:4

யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை கொன்று குழியில் போட திட்டமிட்டார்கள் 
ஆதி 37:20

கடவுள் யோசேப்பை மரணத்திலிருந்து காப்பாற்றி தேசத்திற்கு இரண்டாவது அதிபதியாக ஆசீர்வதித்தர்
ஆதி 37:41

4) மோசே
மோசே பிறந்த உடன் பார்வோனால் வந்த ஆபத்து 
யாத் 1 : 16

கடவுளுக்கு பயந்து மருத்துவச்சிகள் மோசேவை காப்பாற்றினார்கள் 
யாத் 1 : 21

கடவுள் மோசேவை கொண்டு ஏற்ற சூழ்நிலையில் பயன்படுத்தினார் 
யாத் 3 : 10

5) மொர்தெகாய்
மொர்தெகாய் ஏற்ற வேளையில் அகஸ்வேரு ராஜாவை காப்பாற்றினார் 
எஸ்தர் 2 : 21,22

யூத ஜனங்களை அழிக்கும்படி கட்டளை கொடுக்கப்பட்டது 
எஸ்தர் 4 : 8

கடவுளால் ஏற்ற சூழ்நிலையில் உயிரோடு காக்கப்பட்டார்
எஸ்தர் 7 : 9

6) தாவீது
தாவீதுவின் சகோதரர் தாவீது மீது கோபமடைந்தார் 
1 சாமு 17 : 28

தாவீது கடவுளை மட்டும் நம்பி இருந்தார் 
1 சாமு 17 : 36,37

கடவுள் தாவீதை ஏற்ற சூழ்நிலையில் வெற்றி மற்றும் உயிரோடு காப்பாற்றினார்
1 சாமு 17 : 49,50

7) தானியேல்
தானியலுக்குப் பிரதானியிடம் தயவு கிடைத்தது 
தானி 1 : 9

தானியேல் தேவனிடம் ஜெபம் செய்ததால் ராஜா கொடுத்த தண்டனை
தானி 6 : 16

தானியேலை தேவன் 
காப்பாற்றினார் 
தானி 6 : 22

  8 ) அனனியா
 மீஷாவேல்,அசரியா
ராஜாவை வணங்கும்படி கட்டளையிட்டார்கள் 
தானி 3 : 11

கடவுள் அனனியா,மீஷாவேல்,
அசரியா, மூன்று பேரையும் காப்பாற்றினார் 
தானி 3 : 26

9) பவுல்
யூதர்கள் பவுலை கொலை செய்யும் படி வகை தேடினார்கள் 
அப்போ 9 : 23

கடவுள் பவுலை காப்பாற்றினார் 
அப்போ 9 : 25
2 கொரி 11 : 33

10) பேதுரு 
பேதுருவை சிறையில் அடைத்தார்கள் 
அப்போ 12 :4

கடவுள் பேதுருவை ஏற்ற வேளையில் காப்பாற்றினார் 
அப்போ 12 : 7,8

11) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து:
கல்லெறிந்து கொல்லும் படி வந்த யூதர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டார்.
யோவா  8:59: 

12.) நோவா:
கடவுள் தாம் உண்டாக்கின ஜீவ ஜந்துக்களை நிக்கிரகம் பண்ணும்பொழுது அதில் இருந்து நோவா காக்கப்பட்டார் 
ஆதி  7 : 1, 4

13)லோத்து
சோதாமில் வசித்து வந்த லோத்து வை  சோதோம் பட்டணம் அழிவிலிருந்து அவரை மீட்டார்
லூக்  17 : 29

14.) எலியா
ஆகாப்பின் கைக்கு தப்புவித்து கேரீப் ஆற்றண்டையிலே காகங்கள் மூலம் போசித்தார்.
1  இரா 17 : 3

15) எரேமியா
எரேமியா துறவிலிருந்து  தேவனால்  காப்பாற்றப்பட்டார்
எரேமியா 38 : 6 , 10

 கிறிஸ்துவுக்குள்🙏

Comments