அன்பானவர்களே 🙏
🚩நிழல் நிஜம் 🚩
நிழல்:
தகன பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் ஆட்டுக்கடாவின்
உள் உறுப்புகள்
மற்றும்
நெருப்பு.
(லேவி: 8 :25 & 28).
நிஜம் கண்டுபிடிங்கள்.
🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
நிஜம் :
ஆட்டுக்கடாவின் விசேஷமான பாகங்களான கொழுப்பும் உள் உறுப்புகளும் நம்முடைய இருதயத்தின் விசேஷமான எண்ணங்களையும் வல்லமைகளையும் காண்பிக்கின்றன.
இந்த உள் உறுப்புகளை ஆசாரியர்கள் கைகளில் ஏந்திக்கொண்டு அசைவாட்டுவது என்பது -
நம்முடைய இருதயத்தின் எண்ணங்கள் அர்ப்பணிக்கப்பட்ட பிறகு
தொடர்ச்சியாக மரண பரியந்தம் உயர்த்தப்பட்ட வாஞ்சையானது (கைகளில் ஏந்தி அசைவாட்டுவது) தேவன் ஏற்றுக் கொள்ளும் மட்டும் விடாது செய்யப்படுவதை காண்பிக்கின்றது.
அந்த பலிப் பொருட்களை ஆசாரியர்களின் கையிலிருந்து மோசே எடுத்தது போல....
நம் ஆண்டவர் அதை நம்மிடம் எடுக்கும் வரை நாம் நம்முடைய இருதயத்தின் வாஞ்சைகளை அர்ப்பணிப்புகளை எந்த காலத்திலும் நிறுத்தக்கூடாது.
அதுபோல நம்முடைய உள்ளான கொழுப்பாகிய அன்பு/வாஞ்சை அதிகமாக பலிபீடத்தில் வைக்கப்படும் போது தேவனின் அங்கீகரிப்பு எனும் அக்னியை அதிகரிக்க உதவுகிறது.
தேவனுக்கான நமது பிரதிஷ்டையில் அதிகரிக்கும் அன்பை/வாஞ்சை (கொழுப்பு) பொறுத்து நமது பலியும் விரைவாக தகனிக்கிறது/ அங்கீகரிக்கப்படுகின்றது.
🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment