FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[87] கதிர் கட்டும் இரண்டு அப்பங்களும் [லேவி 23: 10,11, 16,17]

அன்பானவர்களே 🙏
🚩நிழல் நிஜம்🚩
நிழல் :

லேவி: 23 அதிகாரம், வசனங்கள் 10,11,16,17. 

நிஜம் கண்டுபிடிங்கள்.
🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
நிஜங்களின் விளக்கம்: 

லேவியர் 23:10,11 
10இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது; நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். 

11 உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார். 
லேவியர் 23:10,11

பனித விளக்கம்
🌾 அறுவடையின் முதல் விளைச்சல்: உயிர்த்தெழுதலின் முதற்பலன் தலை-வர் இயேசு (1 கொரி 15:20) 

கதிர் கட்டு
ஆண்டவருக்கு பின் உயிர்த்தெழுதல் அடையும் அவரது உடல் ஆகிய திருச்சபை = 144000 
(கொலோ 1:18)

ஆசாரியர்(குரு)= பரமதந்தை 

ஆரத்தி பலி = ஈடுபலியின் பலனாக பெற்ற உயிர்த்தெழுதல். 

ஓய்வு நாளுக்கு பின் வரும் நாள்:
 = 8ஆம் நாள்= அறுவடையின் துவக்கம் = உயிர்த்தெழுதலின் துவக்கம்.  

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
லேவி 23:16,17
 16 ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள். 

17 நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு முதற்பலனின் ஆரத்திப் பலியாகக் கொண்டு வாருங்கள். 
லேவியர் 23:16, 17

பனித விளக்கம்:
ஆண்டவர் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து 50 வது நாளான பெண்டிகாஸ்ட் நாளில், புனித விவிலியத்தின் இரு ஏற்பாடுகளும் நிறைவு பெற்றது. 

2 அப்பங்கள் = 
பழைய ஏற்பாடு + புதிய ஏற்பாடு 

பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்

Comments