EPHOD | אפוד | எபோத் - EXODUS 28:28

EPHOD

The breastplate should not be detached from the Ephod.


அன்புடையீர், வணக்கங்கள் 🙏
நிழலும் பொருளும்



 நிழல்:

மார்பதக்கம் ஏபோத்திலிருந்து விலகக்கூடாது. 
(யாத்திராகமம்28 :28).
பொருள் கண்டுபிடிங்கள்

பொருள்:

ஏபோத் என்பது ஆசாரியர்கள் அணியும் கை இல்லாத ஆடை.
ஏபோத்து - இளநீல நூலாலும், இரத்தாம்பர நூலாலும், சிவப்பு நூலாலும், திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் மற்றும் பொன் நூலாலும் நேர்த்தியாகவும் அழகாயும் நெசவு செய்யப்பட்ட துணியால் விசித்திர வேலையாய் செய்யப்பட்டிருந்தது.
இது இரண்டு பாகங்களாக, ஒன்று பின்புறமாகவும் மற்றொன்று முன்புறமாகவும் தொங்கவிடப்பட்டிருந்தது.
தோள்பட்டையில் இரு பொன் கொக்கிகளால் இரு பாகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.
முன் மற்றும் பின், ஆகிய இரண்டு பகுதிகளாக இருக்கும் ஏபோத்து
கடவுளின் உடன்படிக்கையின் இரண்டு பகுதிகள் ஆகும்.

 ஆபிரகாமின் உடன்படிக்கையின் பரலோக மற்றும் பூமிக்குரிய இரு ஆசிர்வாதங்களை அடையாளப்படுத்துகிறது.

அதாவது ஆபிரகாமோடு கடவுள் செய்த உடன்படிக்கையை ஏபோத்தின் முன்பாகமும்...
புதிய உடன்படிக்கையை ஏபோத்தின் பின்பாகமும் காண்பிக்கிறது.
இவ்வாறாக ஏபோத்தின் இந்த இரண்டு பாகங்கள் (இந்த இரண்டு உடன்படிக்கைகள்) நம்முடைய பிரதான ஆசாரியரை (நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து) சார்ந்து இருப்பது போல் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
அவைகளை, தாங்காமல் இருந்தாலும், அவற்றின் விதிமுறைகளை செயல்படுத்தாமல் இருந்தாலும் அவைகள் கீழே விழும். ஆனாலும், அவ்விரு பாகங்களும் கீழே விழாதபடி தெய்வீக வல்லமை என்னும் பொன் கொக்கிகளினால் இறுக்கமாக கட்டப்பட்டிருக்கும்.

ஒட்டு மொத்த ஜனங்களையும் ஆசீர்வாதத்திற்குள் கொண்டுவரும் உயர்ந்த வேலை பொறுப்பு பிரதான ஆசாரியராகிய நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ளது என்பதையும் காட்டுகிறது. 

கிறிஸ்துவுக்குள்

Comments

Post a Comment