FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[90] சங்கீதங்களின் தலைப்புகளும் எபிரெய அர்த்தமும்

👨👩👦👦 
விசுவாச குடும்பத்தாருக்கு 🙏
🪐🪐 இன்று ஒரு தகவல் 📝📨 அறிந்து கொள்வோம் 🪐🪐

சங்கீத புஸ்தகத்தின் எபிரெய வார்த்தை 'செஃபேர் தெஹில்லிம்' (Sepher Tehillim The Book of Praises ). அறிஞர்கள் சங்கீதங்களின் தலைப்புகளுக்கு கொடுத்திருக்கிற அர்த்தங்களை ஆங்கில எழுத்துக்களின் வரிசையின்படி பார்க்கலாம்.

1. "Neghi no th" ( சங்கீதம் 4:1-8; 6:1-10; 54:1-7; 55; 67:1-7; 76:1-12) '' என்னும் வாத்தியம் என்ற வார்த்தை 6 முறை வருகிறது. இதன் அர்த்தம் ‘நரம்பு இசைக்கருவிகளுடன்' என்பதாகும். தர்டில் இத்தலைப்பை சங்கீதம் 3:1-8; 56:1-12; 53:1- 6; 54:1-7; 60:1-12; 66, 756:1-10 ஆகிய சங்கீதங்களின் தொடர்ச்சி என்று கூறுகிறார்.

2. Nehi lo th ( 5:1-12) 'நெகிலோத்' என்னும் வாத்தியம் காற்றினால் இசைக்கப்படும் கருவியாகும். இச்சங்கீதம் 4ம் சங்கீதத்தின் தொடர்ச்சியாகும்.

3. Shemi ni th (சங்கீதம் 6:1-10; 12:1-8), 'செமனீத்' என்றால் ‘எட்டாவது என்று பொருள். இது பெரும்பாலும் ஆண்கள் பாடற்குழுவை குறிக்கிறது. 'Ala mo th, ('அலமோத்') என்பது கன்னிகைகள் பாடற்குழுவை குறிக்கிறது. இரண்டு வார்த்தைகளும் musical notes என்று அழைக்கப்படுகிறது.

4. Shigga yo n (சங்கீதம் 7) 'சிகாயோன்' என்பது ஒரு musical note. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும்போது தகுந்த இசையோடு பாடப்படும் கவிதை என்று சிலர் இதை அழைக்கிறார்கள்.

5. Gitti th (சங்கீதம் 8: 1 - 9, 81, 84: 1 -12) 'கித்தீத்' என்பது பெலிஸ்தரின் பட்டணமாகிய காத் பட்டணத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வாத்தியம் அல்லது அங்கே பயன்படுத்தப்பட்ட ஒரு இராகத்தில் பாடப்பட்ட பாடலாகும். தர்டில் gitto th (கித்தோத்) என்ற எபிரெய பதமாய் (திராட்சை ஆலைகள்) இது இருக்கலாம் என்று கருதி சங்கீதங்கள் 7, 80 மற்றும் 83 ஆகியவற்றை கூடாரப் பண்டிகையோடு இணைத்துப் பார்க்கிறார்.

6. Mu'th labbe n: (சங்கீதம் 9) 'முத்லபேன்' என்ற வார்த்தை 'ஒரு மகனின் மரணம்' என்பதை குறிக்கிறது. தர்டில் இதை ‘ ஒரு வெற்றி வீரனின் மரணம்' என்று மொழிபெயர்க்கிறார். சங் 8:1-9ன் தொடர்ச்சியாக இதைப் பார்க்கும்போது கோலியாத்தின்மேல் தாவீது எடுத்த வெற்றியைக் கொண்டாட இது பாடப்பட்டது என்று அறியலாம்.

7. Higga yo n (சங்கீதம் 9:16) 'இகாயோன்' என்பது தலைப்பு அல்ல. ஆனால் 'சேலா' என்ற வார்த்தையோடு இணைந்து வருகிறது. The Revised Version ( British & American) 
சங் 92:3ல் 'ஒரு ஆர்வமான சத்தம்' என்றும் சங் 19:14ல் 'தியானம்' என்றும் மொழிபெயர்க்கிறது. இது musical noteற்கு இணையான வார்த்தையாகவும் கருதப்படுகிறது.

8. Mikhta m (சங்கீதம் 16:1 - 11; 56 - 60): 'மிக்தாம்' என்ற வார்த்தை யூத ரபிகளின் யோசனைகளுக்கேற்ப 'பொன்னைப்போன்ற பாடல்' என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதன் உண்மையான அர்த்தம் இன்னும் அறியப்படவில்லை.

9. 'Ayeleth ha-Shahar (சங்கீதம் 22 ) - 'அகிலேத் ஷகார்' என்ற வார்த்தைக்கு 'அதிகாலையின் உதவி' என்று பொருள். அநேகர் மிகவும் பரிச்சயமான ஒரு பாடலின் ஆரம்ப வரிகளாக இவை இருக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

10. "Dedication of the House” (F 30:1-12) ' கிரகப்பிரதிஷ்டையின் பாடல் ' என்ற இப்பாடல் கர்த்தருடைய ஆலயம் கட்டப்படும்போது பாடப்பட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பாடலைக் குறிக்கிறது.

11. Mask^| ( சங்கீதம் 32:1-11; 42-45; 52 - 55 ; 74; 78; 88; 89; 142:1-7)
'மஸ்கீல்' என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் இன்னும் அறியப்படவில்லை. பிரிக்ஸ் என்ற அறிஞர் இந்த வார்த்தையை 'தியானம்' என்றும் தர்டில் என்ற அறிஞர் 'போதக சங்கீதம்' என்றும் கிர்க் பேட்ரிக் என்ற அறிஞர் 'தந்திரமான சங்கீதம்' என்றும் இதை அழைக்கிறார்கள். இந்த 13 சங்கீதங்களில் சில கட்டளைகளை கொடுக்கிறதாகவும் சில போதகங்களாகவும் அமைவதைக் காண முடியும்.

12. Yedhu thu n : ( சங்கீதம் 39:1 - 13) எதுதூன் என்பவர் இராகத்தலைவனாயிருந்தார் (சங்கீதம் 77 தலைப்பு). எதுதூன் தாவீதின் நாட்களில் பாடல்கள் பாட பிரித்து வைக்கப்பட்டார் (1நாளா 16:41, 25:3). பாடல் ஆராதனை நடத்த இவருடைய முறை கடைபிடிக்கப்பட்டிருந்திருக்கலாம்.

13. "Song of Loves" (சங்கீதம் 45) 'நேசப்பாட்டாகிய சங்கீதம்' ஒரு திருமணப்பாடலின் தலைப்பாகும்.

14. Sho shanni m (சங்கீதம் 45; 69) 'சோஷனீம்' என்றால் 'லீலி புஷ்பம்' என்று பொருள். Sho shanni m 'e dhu th (சங்கீதம் 80, 60:1-12) 'சோஷானீம் எடூத்' என்றால்
'லீலி புஷ்பம், ஒரு சாட்சி' என்று பொருள். தாடில் இந்த சங்கீதங்களை 44, 59, 68, 79:1-13 ஆகிய சங்கீதங்களின் தொடர்ச்சி என்று கூறி இவைகளை பஸ்கா பண்டிகையோடு
ஒப்பிடுகிறார்.

15. 'Ala mo th ( 46: 1 - 11 ) - 'அலாமோத்' என்ற வார்த்தைக்கு
'கன்னிகைகள்' என்று அர்த்தம். இதன் பொதுவான நோக்கு இப்பாடல் soprano voices ஆல் பாடப்பட வேண்டும் என்பதே. சிலர் இப்பாடல் பெண்களின் பாடற்குழுவால் பாடப்படும் பாடல் என்று கருதுகிறார்கள். ( 1நாளா 15:20, சங்கீதம் 68 : 11, 24). தர்டில் என்ற அறிஞரின் கூற்றுபடி சங்கீதம் 45ன் தொடர்ச்சி இது என்றும் ஒரு இளவரசியின் திருமணத்தில் இப்பாடல் பெண்களின் பாடற்குழுவால் பாடப்படும் பாடல் என்றும் கருதப்படுகிறது.

16. Mahalath ( சங்கீதம் 53:1 - 6), Mahalath le 'anno th ( சங்கீதம் 88) - '', 'மகலாத்லேயனோத்' . தர்டில் ‘mho lo th' 'மேகோலோத்' என்ற எபிரெய பதத்திற்கு கொடுக்கும் அர்த்தமான 'நடனங்கள்' என்ற வார்த்தை சரியானதே. சங்கீதம் 87:1-7ன் தொடர்ச்சியாக வரும்போது 'mho lo th' 'மேகோலோத்' என்ற வார்த்தை சீயோனுக்கு தாவீது மிகுந்த மகிழ்ச்சியோடு உடன்படிக்கை பெட்டியை எடுத்து வந்ததை இது குறிக்கிறது (2 சாமு 6:14, 15).

17. Yo nath 'e lem ho kim (சங்கீதம் 56:1 - 13): 'யோனாத் ஏலம் ரிக்கோகீம்' என்ற இந்த சங்கீதம் 55ம் சங்கீதத்தின் தொடர்ச்சியானது. 55ம் சங்கீதமானது 'தூரத்திலுள்ள தெரபிந்து மரங்களிலுள்ள புறா' என்றும் 'தூரத்திலுள்ள புறாக்களில் அமைதியான புறா' என்றும் அழைக்கப்படுகிறது. சங் 55:6-8 இதை தெளிவாக குறிப்பிடுவதை காணலாம்.

18. 'Al-tashhe th ( சங்கீதம் 57 - 59, 75 : 1 - 10 ) 'அல்தஷ்கேத்' என்ற வார்த்தைக்கு 'அழிக்காதே' என்று அர்த்தம். இப்பாடல் சங்கீதம் 56 மற்றும் 74ன் தொடர்ச்சி ( உபா 9:26 ) என்று கருதப்படுகிறது . அநேகர் ஒரு பாரம்பரியப் பாடலின் ஆரம்ப வரிகளாக இவை இருக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

19. "Song of Ascents or Song of Degrees," ( சங்கீதம் 120:1 - 7 முதல் சங்கீதம் 134 வரை ) 'ஆரோகண சங்கீதம்' என்று அழைக்கப்படும் இந்த 15 சங்கீதங்களும் தங்கள் வருடாந்திர 3 பண்டிகைகளான (லேவி 23 : 23 - 44 ) பஸ்கா பண்டிகை, அறுப்பின் பண்டிகை, கூடாரப் பண்டிகைகளைக் கொண்டாட யூதர்கள் எருசலேமுக்கு பிரயாணமாய் வரும்போது பாடும் பாடல்கள் என்று கருதப்படுகிறது (சங் 122:4, 121-123, 125:1-5, 127:1-5, 128:1-6, 132-134 ஆகியவை மிகவும் பொருத்தமாக அமைவதை காண முடியும்.

20. "For the Chief Musician" 55 சங்கீதங்கள் ஆலயத்திலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாடல்கள். இவை ஆலயத்திலே பாடப்படும்படியும் சில இராகம் அமைக்கப்படும்படியும், என்ன வாத்தியங்கள் இவற்றிற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்படும்படி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாடல்கள் என்று
கருதப்படுகிறது.

21. 'Selah' - சேலா என்பது தலைப்பு அல்ல. இது 71 முறை சங்கீத புஸ்தகத்திலும் 3 முறை ஆபகூக் புஸ்தகத்திலும் வருகிறது. கிரேக்க பாஷையிலே மொழிபெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாடு Septuagint என்று அழைக்கப்படுகிறது. இது சேலா என்ற வார்த்தைக்கு ‘ dia psalma' என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒரு பாடலின் பல்லவிக்கும் அனுபல்லவிக்கும் இடையே வரும் இசை(instrumental interlude) என்று கூறுகிறது. The Targum Aquila மற்றும் பழைய மொழிபெயர்ப்புகள் 'என்றென்றும்' என்று அர்த்தம்
கொடுக்கின்றன. ஜெரோம் இதை 'எப்பொழுதும்' என்று மொழிபெயர்க்கிறார். அநேக தற்கால மொழிபெயர்ப்புகள் இதை 'உயர்த்தி'('to raise') என்று மொழிபெயர்த்து, பாடகர்கள் இவ்விடத்தில் தங்கள் சத்தத்தை உயர்த்தி பாட வேண்டும் என்று கூறுகின்றன.

🎵🎸🎺🎻🪕🎶🎷🎹🎼🪇🪈🪗🪘🥁🎤
 கிறிஸ்துவுக்குள்

Comments