அன்பானவர்களே🙏
கேள்வி
தகப்பனை பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டை பண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.
நீதிமொழிகள் 30:17
இதில் மறைந்திருக்கும் ஞான அர்த்தம் என்ன ?
பதில்
தகப்பன்: பரம தந்தை யா_வே
தாய் : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
கண் : மேட்டிமையான என்னங்கள்
காகம், கழுகு குஞ்சுகள்:
இங்கு பிசாசையும், குட்டி பிசாசுகளையும் அடையாளப்படுத்தும். வெளி 18:2
பனித விளக்கம்
நாம் மனதில் மேட்டிமை கொண்டு, இறை வார்த்தைகளையும், ஏசு கிறிஸ்துவின் எச்சரிப்புகளை அசட்டை செய்தால், நிச்சயமாக பிசாசின் பிடியில் அகப்படுவோம்.
கண்ணானது, சரீரத்தின் விளக்காய் இருக்கிறது உன் கண் தெளிவாக இருந்தால் உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
சங்கீதம் 119: 105
உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
நாம் கடவுளின் சத்தியங்களை, நம்முடைய கிரியைகளினால் அசட்டை பண்ணும் போது, கனவீனப்படுத்தும்போது, ஆகாயத்துப் பிரபுவாகிய சாத்தான்,
சத்தியங்களைப் பகுத்துப் பார்ப்பதில் தெளிவற்ற தன்மையைக் கொண்டு வந்து, இருளை வெளிச்சமாகவும் வெளிச்சத்தை இருளாகவும் காண்பிப்பான்.
சத்தியத்தை நாம் மேன்மைப்படுத்தினால், அது நம்மை மேன்மைப்படுத்தும்; நாம் சத்தியத்தை கனப்பண்ணினால் அது நம்மை கனம் பண்ணும்.
IN CHRIST
Comments
Post a Comment