[93] THE GOOD HEARTED PEOPLE AROUND JESUS CHRIST | இயேசு கிறிஸ்துவை சுற்றி இருந்த நல் இருதயங்கள்

அன்பானவர்களே 🙏
நம் ஆண்டவரை சுற்றி இருந்த ஏதாவது ஒரு பத்து இருதயங்களையும், அவர்கள் மூலமாக அடையாளமாக வெளிப்பட்ட குணங்களையும் விளக்கவும்!
1️⃣யோசேப்பு

கடவுள் தன்னை உயர்த்துவதற்காக பொறுமையோடு, நியமித்த நேரத்திற்காக காத்திருந்தார். 
பாவத்துக்கு விலகி ஓடினார். கடவுளோடு கொண்டிருந்த உறவை எங்கு சென்றிருந்தாலும் விடாமல் கொண்டிருந்தார். 

நாமும் ஞானஸ்நானத்தில், புதிய சிருஷ்டி என்கிற கரு உருவாகி ;  அது முழுமையாக கிறிஸ்துவாக உருவாகும் வரை,  நம்முடைய வாழ்க்கையை ஆண்டவருக்காக வாழ்ந்து புது சிருஷ்டி அழியாதபடி காத்துக்கொள்ள  வேண்டும். 

2️⃣மரியாள்:
கடவுள் இட்ட கட்டளைகளை ஏன், எதற்கு என்று கேட்காமல் மனப்பூர்வமாக அவரின் திட்டத்திற்கு தாழ்மையோடு ஒப்பு கொடுத்தார். 

3️⃣ அப்போஸ்தலர்கள்:
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் 3 - 1/2 வருட வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்க பாக்கியம் பெற்றவர்கள். அவரை போலவே, சத்தியத்திற்காக துன்பங்களை சகித்தார்கள். 

4️⃣நூற்றுக்கு அதிபதி
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது அதீத விசுவாசத்தை வெளிப்படுத்தினார். 

5️⃣பாவியாகிய ஒரு ஸ்திரீ
லூக்கா 7:37
தன்னிடத்திலுள்ளதில் சிறந்ததை, நம்முடைய ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டுமென்று செயல்பட்டார். 

அந்த ஸ்திரீ தன்னுடைய கண்ணீரினால் நம்முடைய ஆண்டவருடைய பாதத்தை நினைத்து, தன் தலைமயிரினால் துடைத்து,  முத்தம் செய்தது, கடவுள் நமக்கு கொடுத்த இந்தச்  சரீரத்தின் மூலமாக அவரை மகிமைப்படுத்தக் கூடிய செயல்களை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாமும் செய்ய முடியும் என்பதை அடையாளப்படுத்தும்.

6️⃣ பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ
லூக்கா 8:43,47,
அனைவருக்கும்  முன்பாக அந்த ஸ்திரீ,  நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தினார். 
நாமும் நம்முடைய ஆண்டவரை அனைவர் முன்பாகவும் அறிக்கை செய்கிறவர்களாக இருக்க கற்று கொடுக்கிறது. 

7️⃣சகேயு
லூக்கா 19:8,
பாவங்கள் உணர்த்தப்பட்டு,  கடவுளின் பிரமாணங்களுக்கு, உடனே தன்னை அர்ப்பணிக்கக்  கூடிய இருதயமாக சகேயு இருந்தார்.

8️⃣மரியாள்
லூக்கா 10:39,42,
நம்முடைய ஆண்டவருடைய பாதத்தருக உட்கார்ந்து, தேவையான நல்ல பங்கை பெற்றுக் கொண்ட இருதயம்.

பாதத்தருகே என்பது மிகவும் நெருக்கமாக நம்முடைய ஆண்டவருடைய திட்டங்களுடன்  இசைந்து வாழக்கூடிய மனநிலையை குறிக்கிறது. 

9️⃣யோவான் ஸ்நானகர்
யோவான் 3 : 29
மணவாளனுடைய சத்தம் கேட்பது சந்தோஷம்.

இந்த உலகத்தின் காரியங்களுக்குப் பிரிந்து கடவுளுடன் வாழக்கூடிய வாழ்க்கையில் சந்தோஷம் என்பதை வெளிப்படுத்தி காண்பித்தார். 

🔟 ஒரு குருடன்
லூக்கா 18:35- 43
எத்தனை பேர் ஆண்டவருக்கு பின்னாகச் செல்வதை தடை செய்தாலும்,  அதைப் பொருட்டாக எண்ணாமல், ஆண்டவரின் பின்னால் சத்தமிட்டுக்கொண்டே  சென்றார். 
நம்முடைய ஆண்டவரும் அவரது விசுவாசத்தை கண்டு,  தம்மிடத்தில் வரும்படி செய்து பார்வையடைய செய்தார். 
நாமும் தடைகளை தாண்டி, கிறிஸ்துவை அண்டி கொண்டால், நமது கண்களும் அவரது அதிசயமான சத்தியங்களை கண்டுணரும். 

கிறிஸ்துவுக்குள்

Comments