அன்பானவர்களே 🙏
24இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது.
கேள்வி
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீசான் மாதம் பத்தாம் தேதி கழுதை குட்டியின் மேல் ஏறி வந்தார்.
🐴 இது எதற்கு அடையாளம் ?
🐴 மற்றும் உடன் வந்த கழுதை எதற்கு அடையாளம் ?
பதில்
🐴கழுதை குட்டி: புதிய கட்டளையாகிய அன்பின் பிரமாணத்துக்கு அடையாளம்.
🐴கழுதை நியாயப்பிரமாணத்துக்கு அடையாளம். இது முற்றுப் பெற போகிறது.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கழுதை குட்டியின் மேல் ஏறி வந்தார், இதற்கு என்ன அர்த்தம் என்றால் இரட்சிப்பை அன்பின் பிரமாணத்தின் (John_13:34, 1John_2:8) மூலமே பெற முடியும் என்று ஜனங்களுக்குள்ளே கொண்டு வருகிறார்.
யாரும் ஏறிடாது என்பது, புதிய உபதேசத்தை யாரும் இன்னும் பயன்படுத்தவில்லை என்பதை அடையாளப்படுத்தும்.
மேலும் நியாயப்பிரமாணமானது (கழுதையானது) கிறிஸ்துவின் புதிய உபதேசத்திற்கு வழிநடத்தக் கூடிய வழித்துணையாக உள்ளது என்பதை அடையாளப்படுத்துகின்றது.

கலாத்தியர் 3:24
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment