FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[98] 38 வருட வியாதி கொண்ட மனிதன். [JOHN 5:5]

அன்பானவர்களே🙏
கேள்வி
முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஓரு மனுஷன் அங்கே இருந்தான். 
யோவான் 5:5

ஞான அர்த்தம்
38 வருடம் வியாதி கொண்டிருந்த மனுஷன் யாரை அடையாளப்படுத்தும் என்றால் இஸ்ரயேல் ஜனங்களை அடையாளப்படுத்தும். 

எப்படி இதை ஊர்ஜிதப்படுத்தலாம்? 

இஸ்ரயேல் ஜனங்கள் காதேஸ்பர்னேயாவில் இருந்து சேரேத் ஆற்றைக் கடக்கும் காலங்கள் வரை 38 வருடம்.

இது எதற்கு அடையாளமாக இருக்கிறது என்றால் சுவிசேஷ யுகத்தில் அறுவடையின் காலப்பகுதி வரை இஸ்ரயேல் இந்த ஆசிர்வாதத்துக்குள் வரவில்லை என்பதை.

இவர்கள் அறுவடையின் காலப்பகுதி முதல் தேசத்தை திரும்ப பெற்றுக் கொள்ள கூடிய ஆசிர்வாதத்திற்குள் வருவார்கள். 

யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப் புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.
உபாகமம் 2:14

கிறிஸ்துவுக்குள்

Comments

Post a Comment