அன்பானவர்களே🙏
கேள்வி :
ஏன் பானபலியை தூபபீடத்தின் மீது ஊற்றக்கூடாது?
யாத்திராகமம் 30:1-5, 6-9
1 நறுமணப்பொருள் எரிக்குமாறு ஒரு தூப பீடம் செய். சித்திம் மரத்தால் அதனைச் செய்வாய்.
2 நீளம் ஒரு முழம் அகலம் ஒரு முழம் என்று அது சதுரமாக அமையட்டும்; அதன் உயரம் இரு முழம்; கொம்புகளும் அதனுடன் ஒன்றிணைந்தவையாக இருக்கட்டும்.
3 அதன் மேல்பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து, சுற்றிலும், தங்கத் தோரணம் பொருத்து.
4 அந்தத் தோரணத்திற்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் பொருத்து. அதைத் தூக்கிச் செல்வதற்கான தண்டுகளுக்கு அவைபிடிப்பாக விளங்கும்.
5 சித்திம் மரத்தால் அத்தண்டுகளைச் செய்து, அவற்றையும் பொன்னால் வேய்ந்திடு.
6 உடன்படிக்கைப் பேழைக்கு முன்னால், திருத்தூயகத் திரையின் முன்னிலையில் தூபபீடத்தை வைப்பாய். உடன்படிக்கைப் பேழை மேலுள்ள இரக்கத்தின் இருக்கையில் நான் உன்னைச் சந்திப்பேன்.
7 காலைதோறும் ஆரோன் அதன்மேல் நறுமணப்பொருள் எரிப்பானாக! விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போதும் அவன் நறுமணப்பொருள் எரிப்பானாக!
8 மாலை மங்கும் வேளையில் ஆரோன் விளக்குகளை ஏற்றும்போது, உங்கள் தலைமுறைதோறும் ஆண்டவர் திருமுன் இடைவிடாமல் நறுமணப்பொருள் எரிப்பானாக!
9 வேற்று நறுமணப் பொருளையோ, மற்றும் எரிபலியையோ, உணவுப் படையலையோ அதன்மேல் படைத்தலாகாது. அதன் மேல் நீர்மப் படையலையும் (பானபலி) ஊற்றக்கூடாது.
விடுதலைப் பயணம்
(யாத்திராகமம்) 30:1-9
பதில் :
பானபலி - திராட்சை ரசம்.
யாத் 29:40
இது மற்ற பலிகள் செலுத்தப்படும் பொழுது, எப்பொழுதும் துணையாக சேர்க்கப்படும்.
Example:
லேவி:23:18 & 38
பொதுவாக, பானபலி செலுத்தப்பட்டால், அது ஆசாரியர்களுக்கு சொந்தமானது & அவர்கள் அதை பருகுவார்கள்.
தூப பீடம் எதற்கு? தூபம் போடுவதற்கு மட்டுமே.
பானபலியை, தூப பீடத்தின் மீது ஊற்றினால் அந்த இடத்தின் செயல்பாடுகள் கெட்டுப் போகும், வேற எதற்கும் அது பயன்படாது அந்த இடத்தையும் அசத்தப்படுத்தும்.
அதனால் அதன் மீது ஊற்றக்கூடாது.
பொருள்:
பானபலி - திராட்சை ரசம்
நம் ஆண்டவர் நமக்கு குடிக்க கொடுத்த அவரது வாழ்க்கையை அடையாளப்படுத்தும்.
அதை நம் குடிக்க வேண்டுமே தவிர, அதாவது நம் ஆண்டவரின் வாழ்க்கையை நாம் வாழ வேண்டுமே தவிர, அதை எதற்கும் பிரயோஜனம் இல்லாதபடிக்கு வீணடிக்க்கூடாது என்பது அதன் உள்ளார்ந்த பொருள்.
இப்படி பிரயோஜனம் இல்லாதபடிக்கு வாழும் பொழுது _தூப பீடத்தின் ( நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து) மகிமையை_ அது கெடுக்கும்.
அதாவது நம் ஆண்டவரின் (தூப பீடம்) மகிமையை கெடுப்பது போலாகும்.
💧🩸💧🩸💧🩸💧🩸
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment