அன்புக்குரியவர்களே...🙏
நிழலும் நிஜமும்
நிழல்:
மோசேயும் & ஆரோனும்
23 மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்தினுள் (ஆசரிப்புக் கூடாரம்) நுழைந்தனர்; பின்னர் வெளியே வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அப்போது ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றியது.
லேவியர் 9:23
நிஜம்
4 முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாக எழுதப்பட்டுள்ளது.
உரோமையர் 15:4
ஆசரிப்புக் கூடாரம் என்பது வரப் போகும்
கிறிஸ்துவின் அரசாட்சியை அடையாளப்படுத்தும்.
அதனால், மோசேயும் ஆரோனும் மக்களுக்கு ஆசீரளித்த இந்த நிகழ்வும், 1000 வருட அரசாட்சியில் நடக்க இருக்கும் அடையாளம்.
இங்கு மோசே, நம் பரமதந்தையின் தெய்வீக நீதியையும், பிரமாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
ஆரோன், பிரதான ஆசாரியராகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையும் மற்றும் பூரணமடைந்த
திருச்சபை வகுப்பாரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
எப்படியென்றால்,
கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சியில் ஒட்டுமொத்த மனுகுலத்தை ஆசீர்வதிக்க நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் பூரணமடைந்த திருச்சபையும் செயல்படுவார்கள்.
கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சியில் ஒட்டுமொத்த மனுகுலத்தை ஆசீர்வதிக்க நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் பூரணமடைந்த திருச்சபையும் செயல்படுவார்கள்.
31 ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார்.
திருத்தூதர் பணிகள் 17:31
(அப்போஸ்தல நடபடிகள் 17:31)
புதிய அரசாட்சியின் தீர்க்கதரிசன தரிசனம்: ;
1 பின்பு அந்த வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு,
2 நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது.
3 சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்;
4 அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும்.
5 இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.
(திருவெளிப்பாடு 22:1-5)
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment