கர்த்தருக்குள் பிரியமானவர்களே 🙏
2 ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கையில் இருப்பது என்ன?" என்று கேட்டார். 'ஒரு கோல்' என்றார் அவர்.
நிழல் நிஜம்
நிழல்
மோசே செய்த முதல் அடையாளம்
3 'அதைத்தரையில் விட்டெறி'; என ஆணை விடுத்தார் ஆண்டவர். அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார். அது ஒரு பாம்பாக மாறியது. அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.
4 ஆண்டவர் அவரை நோக்கி, "நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு" என்றார். -அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார். அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.-
விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 4:2-4
நிஜம்
1. கோல்
கோல் என்பது அதிகாரத்தை குறிக்கும். (சங்கீதம் 45.6)
மோசேயின் கையில் இருந்த கோலானது எகிப்தில் வாதைகளை உண்டாக்கக்கூடிய அதிகாரத்தை பெற்றிருந்தது.
2. பாம்பு
பாம்பு = சர்ப்பம் என்பது பாவம் மற்றும் அதன் விளைவுகளை உருவகப்படுத்தக்கூடியதாய் இருக்கிறது
(ஆதியாகமம் 3:1 to 5)
3.கோல் தரையிலே போடப்பட்டது
கடவுள் தமது அதிகார உரிமையை கையில் இருந்து நழுவ அனுமதித்ததின் விளைவே உலகத்தின் எல்லாவிதமான தீமைகளுக்கும் முதல் காரணம் என்பதை அடையாளப்படுத்துகிறது - 1யோவான் 5:19
4.சர்பத்தின் வாலை பிடித்தவுடன் கோலாய் மாறியது
5981 (3958BC to AD2024)
வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் பாவம் மற்றும் அதனுடைய செயல்களில் இருந்து நீதியை கொண்டு வருவதும் மறுபடியும் கடவுள் அந்த அதிகார உரிமையை தன் கையில் எடுத்துக் கொள்வதையும் அடையாளப்படுத்துகிறது.
(வெளிப்படுத்துதல் புத்தகம் 20.2)
🛐🛐🛐🛐🛐🛐🛐
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment