அன்புடையீர்🙏
நிழலும் நிஜமும்
விடுதலைப் பயணம் 28:30 மற்றும் லேவியர் 8:8 இறைவார்த்தையில் உள்ள ஊரிம், தும்மிம் என்பவற்றின் பொருள் காண்க.
நிழல்:
தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையில், ஊரிமையும் தும்மியையும் இட்டு வைப்பாய். ஆரோன் ஆண்டவர் திருமுன் செல்கையில், அவையும் அவன் நெஞ்சின்மேல் கிடக்கும். இவ்வாறு ஆரோன், ஆண்டவர் திருமுன் செல்லும்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களுக்கான தீர்ப்பைத் தம் நெஞ்சின்மேல் தாங்கி நிற்பான்.
விடுதலைப் பயணம் 28:30
ஆரோனையும், அவர் புதல்வரையும் வரவழைத்து ஏப்போதை அவர்மேல் போட்டு,
மார்புப் பட்டையை அவருக்கு அணிவித்து, அதில் ஊரிம், தும்மிம் ஆகியவற்றை வைத்து,
தலையில் பாகை அணிவித்தார்.
பின்னர் மோசே, திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத் திருஉறைவிடத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் திருப்பொழிவு செய்து புனிதப்படுத்தினார்.
லேவியர் 8:6-10
ஊரீம், தும்மீம் என்றால் என்ன?
ஊரீம் - ஒளி,
தும்மீம் - சத்தியம்
கடவுளின் பதிலை பெற்றுக் கொள்வதற்கு, சரியான வழிகாட்டுதலை இந்த ஊரீம், தும்மீம் கொடுத்தது.
அப்படி என்றால் நிஜத்தில் இதன் பொருள் என்ன?
1. இது இறை வார்த்தையை அடையாளப்படுத்துமா?
2. கடவுளின் வல்லமையின் வழிநடத்துதலை அடையாளப்படுத்துமா?
3. கடவுளின் நியாயத்தீர்ப்பை அடையாளப்படுத்துமா?
4. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அடையாளப்படுத்துமா?
நிஜம்:
நிஜத்தில் இதன் பொருள் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அடையாளப்படுத்தும் என்பதே.
காரணம்:
மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார்.
யோவான் நற்செய்தி 8:12
"இயேசு அவரிடம், "வழியும் சத்தியமும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
யோவான் நற்செய்தி 14:6
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment