அன்புடையீர்🙏
கேள்வி
"இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.
மத்தேயு நற்செய்தி 26:15
மத்தேயு நற்செய்தி 26:15

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு ஏன் முப்பது காசுக்கு நிர்ணயித்தார்கள்?
பதில்
இஸ்ரயேல் மக்களுக்கு, அவர்களின் வழக்கப்படி ஒரு அடிமையானவனுக்கு கொடுக்கப்பட்ட விலைக்கிரயம்:-
முப்பது சேக்கல் நிறையான வெள்ளி. (யாத்திராகமம் 21:32)
ஆனால், ஒரு இஸ்ரயேலனின் மதிப்பு:- 50 சேக்கல் வெள்ளி
இருபது வயதுமுதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்.
லேவியராகமம் 27:3
இந்த வசனங்களை நாம் பார்க்கும்போது நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை, பிரதான ஆசாரியர்கள் - இஸ்ரயேலனாக அல்ல ஒரு அடிமையாகவே கருதினார்கள்.
எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.
இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு;
சகரியா 11:12-13
மேலும் வெள்ளி என்பது:- மீட்பதற்காக பயன்படுத்திக்கூடிய பொருள்.
யாத்திராகமம் 38:25
30 வெள்ளிக்காசு:-ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பொருளை அடையாளப்படுத்தும்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மை மீட்டெடுக்க அடிமையின் ரூபமெடுத்து மீட்கும் பொருளாக தன் ஜீவனை கொடுத்தார்.
"மனித உருவில் தோன்றி, தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்."
பிலிப்பியர் 2:7
பிலிப்பியர் 2:7
இதற்காகவே முப்பது வெள்ளிக்காசை அவருக்கு நியமித்தனர்.
கிறிஸ்துவுக்குள்
Excellent truth 👍
ReplyDeleteGod bless 🙏