FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[108] IN THE NAME OF FATHER AND OF THE SON AND OF THE HOLY SPIRIT | பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே [MATHEW 28:19]

DEAR BROTHERS AND SISTERS,🙏
கேள்வி:
father, son, holy spirit
ஏன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் ? (பரிசுத்த ஆவி ஒரு நபர் அல்லாத பட்சத்தில் ஏன் இந்த இடத்தில் சேர்க்கப்பட்டது)?
மத்தேயு 28:19

பதில்:
முதலில் நாம் கவணிக்க வேண்டியது, நம் ஆண்டவர் சகல அதிகாரங்களையும் பெற்றுக் கொண்டவராய் அங்கு இருக்கும் போது,

சுவிசேஷ பணியை செய்யும்படியாக சீஷர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார்.

அவர்கள், சுவிசேஷ பணியை செய்யும் போது மற்றவர்களை சீஷர்களாக்கி, கடவுளின் சித்தத்திற்கு அர்ப்பணிக்க (BAPTISM) செய்ய வேண்டும்.

அப்படி நாம் செய்யும் பொழுது (BAPTISM) நம்முடைய அதிகாரத்திலோ, அல்லது உலக அதிகாரத்திலோ அல்லது சபையின் அதிகாரத்திலோ செய்ய முடியாது.

மாறாக, எந்த அதிகாரத்தினால் இந்த அர்ப்பணிப்பு என்கிற பணி செய்யப்பட வேண்டும் என்றால்,

பிதாவின் அதிகாரத்திலும், குமாரனின் அதிகாரத்திலும், கடவுளின் வல்லமையின் அதிகாரத்திலும் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

இவ்வாறு செய்யும்பொழுது நாம் நமது
பரமதந்தையின் அதிகாரத்தையும்,
இறைமகனாரின் அதிகாரத்தையும்,
கடவுளின் வல்லமையின் அதிகாரத்தையும்
அங்கீகரிக்கிறோம் என்றும் அடையாளப்படுத்துகின்றோம்.

கிறிஸ்துவுக்குள்

Comments