பானை என்பது தண்ணீரை சேமிக்க பயன்படுத்தப் படுகிறது. ஆனால் அது பழையதாகிற போதோ, அல்லது தவறாக பயன்படுத்தும் போதோ, அதில் கீரல்களோ, ஒட்டைகளோ ஏற்பட்டு அதன் முழு பயன் முழுமையாக கிடைக்காமல் போகிறது.

அது போல, கடவுள் தேர்ந்தெடுத்த சில பாத்திரங்கள், தங்களின் ஒட்டையான சில குணங்களால் தங்களது மேன்மையை இழந்து போனதை பற்றியும், ஆனாலும் கடவுள் எவ்வாறு அவர்களையும் பயன்படுத்தி, நமக்கு எச்சரிப்பு தருகிறார் என்று இந்த பாடத்தில் காண்போம்.
எபிரேயர் 11 ஆம் அதிகாரத்தில், பவுல் அடிகளார், நற்சாட்சி பெற்ற விசுவாச வீரர்களை பற்றி கூறுகிறார்.
இந்தப் பாடத்தில் எபிரேயர் 11: 32இல் கூறப்பட்டுள்ள நியாயாதிபதிகளான விசுவாச வீரர்களை பற்றி பார்க்க போகிறோம்.
வாசிக்கலாம்...
"இன்னும் கூறவேண்டுமா? கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு, தாவீது, சாமுவேல் ஆகியோர்பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை."
எபிரேயர் 11:31
நியாயாதிபதிகள்:
நியாயாதிபதிகள் இரண்டாம் அதிகாரம் 10 ஆம் வசனத்தில், கடவுளையும் அவர் இசுரயேலர்களுக்கு செய்த கிரியைகளையும் அறியாத வேறொரு சந்ததி வந்தது என்றும் அவர்கள் பொல்லாப்பானதை செய்தும் பாகால்களை சேவித்தும் தங்களை சுற்றி இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களை பின்பற்றியும் பணிந்தும் கடவுளை கோபமூட்டினார்கள் என்று பார்க்கிறோம்.
அவ்வாறான நேரத்தில் கடவுள் நியாயாதிபதிகளை எழும்பப் பண்ணி, அவர்களைக் கொண்டு அவர் இஸ்ரயேலர்களை கொள்ளையடித்தவர்களின் கையில் இருந்து அவர்களை நீங்கலாக்கி காப்பாற்றினார்.
இந்தப் பாடத்தில் நியாயாதிபதிகளில் எபிரேயர் 11 ஆம் அதிகாரத்தில் இடம்பெற்ற கிதியோன், பாரக், சிம்சோன், எப்தா என்பவர்களை பற்றி பார்க்க இருக்கிறோம்.
கிதியோன்:
கிதியோனின் காலப்பகுதியில் மீதியானியரும் அமலேக்கியரும், பெரும் திரளாக வெட்டுக்கிளிகளை போல வந்து, இஸ்ரேலர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து அவர்களது ஆகாரத்தையும் ஆடு மாடுகளையும் கழுதைகளையும் பறித்துக் சென்று தேசத்தை கெடுத்தார்கள்.
இஸ்ரேல் ஜனங்கள் மீதியானியர் நிமித்தம் கடவுளை நோக்கி முறையிட்டபோது, கடவுள் செவி சாய்த்து அவரின் தூதனானவர் மூலமாக, கிதியோனை தேர்ந்தெடுத்து இஸ்ரயேலை மீதியானியரின் கைக்கு நீங்களாக்கி ரட்சிப்பாய் உன்னை அனுப்புகிறவர் நான் என்று உரைத்தார்.
நியாயாதிபதிகள் 6: 1 - 12
ஆனால், கடவுளின் தூதனின் வார்த்தையை கிதியோன் சந்தேகப்பட்டு நான் மனாசேயில் மிகவும் எளிய குடும்பம், என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்று கூறி கடவுளின் தெரிந்தெடுப்பை சந்தேகித்தார்.
மேலும், கடவுளின் தூதரிடம் ஒரு அடையாளத்தை கேட்டு, தன் வீட்டில் இருந்து ஆகாரப் படையலை படைத்தார்.
கடவுளின் தூதனும் தமது கையில் இருந்த கோலின் நுனியை நீட்டி அவர் படைத்த இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டு, பின் கற்பாறையில் இருந்து வந்த அக்கினி அவற்றைப் பட்சிக்க செய்து அவரது தெரிந்தெடுப்பை உறுதி செய்தார்.
(நியாயாதிபதிகள் 6 அதிகாரம் 17 முதல் 21 வரை).
ஆனாலும், நியாயாதிபதிகள் ஆறாம் அதிகாரம் 36 முதல் 40 ஆம் வசனங்கள் வாசிக்கும் பொழுது, கிதியோன், தன்னுடைய தேர்ந்தெடுப்பை உறுதி செய்வதற்கு கடவுளிடம் மீண்டும் இருமுறை அடையாளத்தை நாடினார்.
இவ்வாறு, விசுவாச வீரர்கள் பட்டியலில்
இடம் பெற்ற கிதியோனும் பலமுறை கடவுளின் தெரிந்தெடுப்பை சந்தேகித்தார். இருப்பினும் கடவுள் அவர்கள் மீது இரக்கம் பாராட்டி அவரைக் கொண்டு செயல்படுத்த நினைத்ததை செயல்படுத்தி இஸ்ரயேலர்களை அவர்களது விரோதிகளிடமிருந்து காப்பாற்றினார்.
பாராக்:
யாபீன், கானானின் ராஜாவின் கையில் இஸ்ரேல் ஜனங்களை கடவுள் விற்று போட்டார்.
யாபினின் சேனாதிபதியின் பெயர் சிசெரா. அவனிடம் 900 இருப்பு ரதங்கள் இருந்ததாக நாம் படிக்கிறோம். இவர்களிடமிருந்து இஸ்ரயேல் ஜனங்களை காப்பாற்றுவதற்காக கடவுள் தெபொராள் என்னும் பெண் தீர்க்கதரிசியை ஏற்படுத்தினார்.
தெபொராள் மூலமாக பாராக் என்னும் மனிதனை கடவுள் தேர்ந்தெடுத்து யாபீனின் சேனாதிபதியான சிசெராயாவை அவன் ரதங்களையும் அவன் சேனையையும் உன்னிடத்திற்கு வரை வைத்து அவனை உன் கையில் ஒப்படைப்பேன் என்று கடவுள் கூறினார்.
ஆனால் பாராக் பயந்த சுபாவம் உள்ளவராக இருந்ததினால், அவர் தெபோராவும் போருக்கு வந்தால் ஒழிய நான் போக மாட்டேன் என்று கூறினதால், பாராக் அவர் பெற்ற மேன்மையை இழந்து, சிசெராவை இறுதியாக கொலை செய்யும் வாய்ப்பு யாகேல் என்னும் ஸ்த்ரீக்கு சென்றது.
(நியாயாதிபதிகள் நான்காம் அதிகாரம் முழுவதும் படிக்கவும்)
ஆனாலும் கடவுள் பாராக்குகும் மீது இரக்கம் பாராட்டி, விசுவாச வீரர் பட்டியலில் அவர் இடம் பிடித்தார்.
சிம்சோன்:
வாசிக்கவும் - நியாயாதிபதிகள் 13,14,15,16 அதிகாரங்கள்.

சிம்சோன், பிறப்பதற்கு முன்பாகவே கடவுளின் தூதன் மூலமாக, அவரது தாய் தந்தையருக்கு அவர் பிறப்பை பற்றி அறிவிக்கப்பட்டு, அவர் நசரேயனாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
சிம்சோன் பலவனாக இருந்தார்.
அவர் ஒரு சிங்கத்தை எதிர்கொண்டு அதை ஒரு ஆட்டுக்குட்டியை கிழிப்பது போல கிழித்துப் போட்டார். நியாயாதிபதி 14: 5, 6.
ஒருமுறை 300 நரிகளைப் பிடித்து அதன் வாளோடு பந்தங்களை கட்டி பெலிஸ்தரின் திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவ தோப்புகளையும் சுட்டெடுத்து போட்டார்.
நியாயாதிபதிகள் 15: 1- 5 வசனங்கள்.
30 பேரை அவர் கொன்று போட்டதையும், ஆயிரம் பேரை கொன்று போட்டதையும் நாம் நியாயாதிபதிகள் 14:19 மற்றும் 15:15 இல் வாசிக்கிறோம்.
ஆனால் இவ்வளவு பலவானாக இருந்த சிம்சோனும் தெலீலாள் என்ற விலைமாதுவினால் ஏமாற்றப்பட்டு, தன்னுடைய பலத்தை பற்றி இரகசியத்தை வெளியிட்டு, தனது மேன்மையை இழந்து, பெலிஸ்தரின் கையில் சிறைப்பட்டு, தலை மயிர் சிரைக்கப்பட்டு, கண்கள் பிடுங்கப்பட்டு, கைகள் இரண்டு தூண்களில் கட்டப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டார்.
(நியாயாதிபதிகள் 16 ஆம் அதிகாரம்)
எப்தா:
வாசிக்கவும்: நியாயாதிபதிகள் 11ஆம் அதிகாரம்.

அவர் ஒரு விலைமாதுவின் மகன். தனது தந்தையின் விட்டாரால் துரத்தி விடப்பட்டு வீணரான மனிதரோடு இணைந்து யுத்தங்கள் செய்து வந்தார்.
ஆனால் அம்மோனியர்கள் இஸ்ரேலரை தாக்கிய போது இஸ்ரவேலர்கள் இப்தாவின் உதவியை நாடினார்கள்.
அவரும் அதை ஏற்றுக் கொண்டு, இஸ்ரேலின் சேனாதிபதியாக அம்மோனியருடன் போர் தொடுக்க சென்றார்.
அவ்வாறு அம்மோனியருடன் போர் தொடுக்க செல்லும் முன்பாக, அவர் கடவுளிடம் ஒரு பொருத்தினை செய்து, கடவுள் அம்மோனியர் புத்திரரை அவரது கைகளில் ஒப்புக் கொடுத்தால்,
திரும்பி வரும் போது, அவரது வீட்டு வாசற்படியில் இருந்து அவருக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும் என்று பொருத்தனை செய்து கொண்டார். .
கடவுளும் அம்மோன் புத்திரரை எப்தாவின் கையில் ஒப்புக்கொடுத்தார். ஆனால் போரில் இருந்து திரும்ப வீட்டுக்கு வந்தபோது, அவரது ஒரே பிள்ளையான அவரது மகள் - தம்பூரு வாசித்து நடனம் செய்து கொண்டு வீட்டிலிருந்து எதிர்கொண்டு வந்தாள்.
எப்தாவும் தான் அவசரப்பட்டு, ஞானம் இல்லாமல் கடவுளுடன் செய்து கொண்ட பொருத்தனையை எண்ணி மனம் வருந்தினார்.
ஆனால் கடின மனதுடன் செய்து கொண்ட பொருத்தனையை நிறைவேற்றினார் என்று வாசிக்கிறோம்.
"மனிதர்களை பலி செலுத்துவது நியாயப்பிரமான சட்டத்தால் தடை செய்யப்பட்டன (உபாகமம் 12:30);
ஆசாரியர்கள் அவற்றைப் பலியிட மாட்டார்கள். அப்படி ஒரு செயல் மிகவும் இழிவானது, மற்றும் செய்திருக்க முடியாது.
யெப்தா தனது மகளை முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணிப்புள்ளவளாக முற்றும் ஒப்புக்கொடுத்து முடித்தார்.
நிரந்தர கன்னித்தன்மைக்கு ஒப்புக்கொடுத்தார்;
'அவள் தன் கன்னித்தன்மையைக் குறித்து புலம்பப் போனாள்;' ஒவ்வொரு வருடமும் அவளுடன் துக்கம் அனுசரிக்க பெண்கள் சென்றார்கள்.
'அவள் தன் கன்னித்தன்மையைக் குறித்து புலம்பப் போனாள்;' ஒவ்வொரு வருடமும் அவளுடன் துக்கம் அனுசரிக்க பெண்கள் சென்றார்கள்.
யெப்தா செய்த பொருத்தனைப்படி, 'அவள் எந்த மனிதனையும் அறியவில்லை.' அதாவது திருமணம் செய்துகொள்ளவில்லை.
இப்படி யெப்தா தன் மகளை கடவுளுக்கென்று ஒப்புக்கொடுத்தாரே தவிர பலி செலுத்தவில்லை.
கடவுள், எஃப்தாவின் மீது இரக்கம் பாராட்டி விசுவாசப் பட்டியலில் இடம் பெற்றார்.
இவ்வாறாக விசுவாச பட்டியலில் இடம் பெற்றவர்களும், தங்களது சந்தேக குணத்தாலும், பயத்தாலும், இச்சையினாலும், ஞானமற்ற காரியங்களினால் தங்களது மேன்மையை இழந்தார்கள்.
கிதியோன் தனது சந்தேக குணத்தினால், கடவுளின் அழைப்பை சந்தேகித்து அடையாளங்கள் கேட்டார்.
பாராக், கடவுளின் அழைப்பை ஏற்றுக் கொண்டாலும், போருக்கு தெபோராளையும் கூட அழைத்து தனது பயத்தை வெளிப்படுத்தினார்.
சிம்சோன், பிறக்கும் முன்பே நசரேயனாக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தனது இச்சையினால் தனது மேன்மையை இழந்து போனார்.
எப்தா தான் அவசரப்பட்டு செய்து கொண்ட பொருத்தனையினால், தனது மகளின் திருமண வாழ்க்கையை தன்னுடைய வாயினாலேயே இழக்க செய்து, நிரந்தர கன்னித்தன்மைக்கு ஒப்புக்கொடுத்தார்.
வாசிப்போம்...
அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன.
1 கொரிந்தியர் 10:6
ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.
1 கொரிந்தியர் 1:27
அவர்கள் மூலமாக நாம் எச்சரிப்பு பெற்று, நமது அழைப்பில் உண்மையுள்ளவர்களாக வாழ்ந்து நாமும் விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம் பெற, பிரயாசப்படுவோம்.
Comments
Post a Comment