FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[105] THE UNWORN CLOTHES | பழைமையாகாத ஆடைகள்

அன்புடையீர் 🙏🏽
இன்று ஒரு தகவல்

unworn clothes exodus

இஸ்ரயேல் மக்களின் உடலோடும்/  உணர்வுகளோடு ஒன்றியிருந்த நம் பரமதந்தையின் மாபெரும் அற்புதம் எது?

ஒரு ஆடையின் சராசரி வயது 5 வருடம் மட்டுமே!

அதுவும், சரியான முறையில் பண்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டால் மட்டுமே இவ்வளவு வருடங்கள் அதை வைத்திருக்க முடியும்!

ஆனால்,

40 வருட காலமாக அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் பழமையாகவில்லை. 

என்ன ஆச்சரியம்!?

இங்கு நாம் உணர வேண்டியது ஆடை பழமையாகவில்லை!!

கடவுளின் வல்லமையினால் அணிந்திருந்த ஆடையின் தரமும், தன்மையும் மாறாமல் பாதுகாக்கப்பட்டது!

ஆம்!

கடவுளின் வல்லமையினால் இன்று நமக்கும் இந்த பாலைநில பயணத்தில் நீதியின் ஆடை கொடுக்கப்பட்டுள்ளது.

அது எந்த சூழ்நிலையிலும் தன் தரத்தை இழக்காது. 

அதை பாதுகாப்பவர் எல்லாம் வல்லவர்!

நாமும் இறைவார்த்தைக்கு   கீழ்ப்படிந்து, இந்த நமது பாலைநில பயணத்தில் நம்பிக்கையுடன் நடந்தால், நிச்சயம் விண்ணக கானான் செல்வோம்!!

கிறிஸ்துவுக்குள்

Comments

Post a Comment