நாம் அனைவரும் அறிந்ததுபோல, இயேசு கிறிஸ்து - மனிதராக பூமியில் வந்து, நம் பரமதந்தை அளித்த பணிகளை நிறைவேற்றினார்.
ஆனால் பழைய ஏற்பாட்டு காலத்திலேயே, இயேசு கிறிஸ்து, கடவுளின் சித்தத்தினை நிறைவேற்ற பூமிக்கு வந்தார். எப்படி?
நிகழ்வு 1:
யோவான் 8:56 வாசியுங்கள்...
"உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்" என்றார்.
யோவான் 8:56
ஆபிரகாம், இயேசு கிறிஸ்துவை கண்டார் என்று இவ்வசனத்தின் மூலம் அறிகிறோம்.. அவர் எப்போது இயேசுவை கண்டார்?

ஆதியாகமம் 18-ம் அதிகாரத்தில், மூன்று பேர் ஆபிரகாமைப் பார்ப்பதற்கு வந்தனர். அவர்களில் இருவர் சோதோம் மற்றும் கோமோராவிற்கு சென்றனர்.
ஆபிரகாம் - ஒரே ஒரு தூதரை மட்டும் வரவேற்றார்.
இந்த சம்பவத்தையே, இயேசு கிறிஸ்து மேலே வாசித்த யோவான் 8:56-ல் குறிப்பிடுகிறார்.
இதனால், பழைய ஏற்பாட்டு காலத்திலேயே இயேசு கிறிஸ்து வந்திருந்ததை இங்கு பார்க்கிறோம்
நிகழ்வு 2:

நியாயாதிபதிகள் 13:18-ல், ஒரு தூதர் சிம்சோனின் பெற்றோர்களிடம் வந்து அவருடைய பிறப்பைப் பற்றிச் சொன்னார்.
தூதரிடம், அவரது பெயரை கேட்டபோது,
"ஆண்டவரின் தூதர் அவரிடம், "எனது பெயரை ஏன் கேட்கின்றாய்? அது வியப்புக்கு உரியது = அதிசயம்" என்றார்."நீதித் தலைவர்கள் 13:18
"வியப்பு = அதிசயம்" என்ற பெயர் இயேசு கிறிஸ்துவுக்கு பைபிளில் வழங்கப்பட்டுள்ளது.
வாசியுங்கள் எசாயா 9:6,
"ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ "வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்" என்று அழைக்கப்படும்."
ஏசாயா 9:6
இங்கு இயேசு கிறிஸ்து "வியத்தகு ஆலோசகர் = அதிசயமானவர்" என்று குறிப்பிடப்படுவதை காணுங்கள்.
நிகழ்வு 3:

இஸ்ரயேலியர் வனாந்தரத்தில் நடந்துகொண்டிருந்த போது, விடுதலை பயணம் 23:20-21-ல் கடவுள் கூறுகிறார், "நான் ஒரு தூதரை அனுப்புகிறேன், அவரை சினமூட்டாதீர்கள்" என்று.
இஸ்ரயேலியர் அந்த தூதரை சினமூட்டினார்களா?
ஆம், எண்ணிக்கை 21 வாசியுங்கள்.
இஸ்ரயேலியர் விஷ பாம்புகளால் பாதிக்கப்பட்டனர்.
பின்னர், விஷ பாம்பின் உருவம் ஒரு கோலில் வைக்கப்பட்டு, அதை பார்த்த இஸ்ரவேலியர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவங்களில் வந்த தூதர் யார்? பழைய ஏற்பாட்டில் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், பவுல் 1 கொரிந்தியர் 10:9-ல் இஸ்ரயேலியர், கிறிஸ்துவை சோதித்தனர் என்று கூறுகிறார்.
"அவர்களுள் சிலர் ஆண்டவரைச் சோதித்தனர். அதனால் பாம்பினால் கடிபட்டு அழிந்து போயினர். அவர்களைப்போல் நாமும் அவரைச் சோதிக்கக்கூடாது."
1 கொரிந்தியர் 10:9
இதனால், விடுதலை பயணம் 23:20-21-ல் குறிப்பிடப்படும் தூதர் - இயேசு கிறிஸ்து என்பதை நாமறிகிறோம்.
இதிலிருந்து நாம் அறிவது யாது?
கடவுளாம் தந்தை மற்றும் இயேசு கிறிஸ்து - இரு தனித்தனியான ஆளுமைகள் என்பதைக் காண்கிறோம்.
இயேசு கிறிஸ்து, கடவுளின் ஒரே குமாரர்.
இதைப்பற்றி பல கிறிஸ்தவர்கள் தெளிவாக அறிந்திருக்கவில்லை.
நாம் கடவுளின் பண்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கடவுள் சாவாமை உள்ளவராக இருக்கிறார்,
அவரை யாரும் காணவும் முடியாது.
அப்படியிருக்க, பழைய ஏற்பாட்டு காலத்தில் சிலர் கடவுளைக் கண்டதாக பார்க்கிறோமே!
மனிதர்கள் கடவுளைக் காண முடியாது என்றால், அவர்கள் யாரைக் கண்டனர்???
அது பழைய ஏற்பாட்டு காலங்களில் - கடவுளின் பணிகளை செய்த இயேசு கிறிஸ்துவயேை!
கொலோசெயர் 1:15 வாசியுங்கள்...
"அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு."
கொலோசையர் 1:15
அவர் கடவுளின் சாயல் = உருவம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆம், இயேசு கிறிஸ்து, பழைய ஏற்பாட்டு காலங்களில் - கடவுளின் பணிகளைச் செய்ய தூதரின் பாத்திரத்தை எடுத்தார்.
அதனால், சீனாய் மலையில் வந்த தூதர் யேசு கிறிஸ்துவே. இவரின் மூலமாகவே இஸ்ரயேலியர் உடன்படிக்கைகள் மற்றும் கட்டளைகளைப் பெற்றனர்.
இந்த மூன்று நிகழ்வுகளின் மூலம் - பழைய ஏற்பாட்டு காலங்களில் இயேசு கிறிஸ்து வந்ததை நாமறிகிறோம்.
சில சந்தேகங்கள் இப்போது எழுகின்றன:
இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு காலங்களில் வெளிப்படாமல் செயல்பட ஒரு வழி தேவைப்பட்டதால், தூதர் என்கிற பாத்திரத்தை எடுத்தார்.
ஆனால், இப்போது அவர் எப்படி இருக்கிறார்?
பிலிப்பியர் 2:10-11 வாசியுங்கள்.

"இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
பிலிப்பியர் 2:10,11
எல்லா பெயர்களிலும் உயர்ந்த பெயர் இயேசு கிறிஸ்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வெளிப்படுத்தல் 3:21 வாசியுங்கள்,
"நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்."
திருவெளிப்பாடு 3:21
ஆம். பழைய ஏற்பாடு காலத்தில் தூதனாக செயல்பட்ட நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அவரின் மனுகுல மீட்பு திட்டத்தை சிலுவையில் நிறைவேற்றி, கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறார்.
அப்படியென்றால்,
சீனாய் மலையில் வந்த தூதர் யார்?
யாக்கோபுடன் போராடிய தூதன் யார்?
மோசேயுடன் முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்கு தோன்றியது யார்?
தானியேலுடன் பேசிய தூதன் யார்?
என்று கருத்து பெட்டியில் பதிவு செய்யுங்கள்.
கடவுள் தாமே தங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்.
IN CHRIST
Comments
Post a Comment