FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



THE TWO LAMBS | இரண்டு ஆட்டுக் குட்டிகள்

பழைய ஏற்பாட்டில், கடவுள் இஸ்ரயேலருக்கு தினசரி எரிக்கப்பட வேண்டிய பலிகளை சமர்ப்பிக்க கட்டளையிட்டார். —ஒன்று காலை மற்றும் மற்றொன்று மாலை நேரத்தில்.


பழைய ஏற்பாட்டின் தினசரி பலிகளுக்கான கட்டளை

யாத்திராகமம் 29:38-41 :
38ஒரு வயது செம்மறிக்குட்டிகளை நாளுக்கு இரண்டு வீதம், எந்நாளும் நீ பலிபீடத்தில் பலியிடுவாய்.

39ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியைக் காலையிலும், இரண்டாவது செம்மறி ஆட்டுக்குட்டியை மாலை மங்கும் வேளையிலும் பலியிடு.

40இரண்டு படி அளவில் பத்தில் ஒரு அளவு மெல்லிய மாவை ஆட்டிப்பிழிந்த கால்கலயம் அளவு எண்ணெயில் கலந்து அதையும், நீர்மப்படையலாகக் கால்கலயம் அளவு திராட்சைப்படி இரசத்தையும் ஒரு செம்மறிக்குட்டியோடு படைப்பாய்.

41மாலைமங்கும் வேளையில் மற்றச் செம்மறிக் குட்டியைப் பலியிடுவாய். காலையில் செய்தது போலவே, உணவுக் காணிக்கைகளோடு நீர்மப்படையலையும் சேர்த்து ஆண்டவருக்கு இனிய நறுமணமாக நெருப்புப் பலியாக்குவாய்.
விடுதலைப் பயணம் 29:38 - 41


எண்ணாகமம் 28:3,4 :
3நீ அவர்களிடம் சொல்; நெருப்புப் பலியாக நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியது; அன்றாட எரிபலியாக எந்நாளும் செலுத்த ஒரு வயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகள்.

4இவற்றுள் ஒன்றைக் காலையிலும், மற்றதை மாலையிலும் பலியிட வேண்டும்.
எண்ணிக்கை 28:3,4


யூதர் பயன்படுத்திய நேரங்கள்

யூதர்கள் பகல் நேரத்தை (சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை) 12 சம அளவிலான மணிநேரங்களாக பிரித்தனர், மேலும் இரவை 4 காவல்களாக பிரித்தனர். நாளின் தொடக்கம் காலை 6 மணி (சூரிய உதயம்), முடிவு மாலை 6 மணி (சூரிய அஸ்தமனம்) ஆகும்.


யூதர் பகல் நேரம்
யூதர் மணிநேரம் நேரம் அதன் முக்கியத்துவம்
முதல் மணி காலை 6:00 சூரிய உதயம், யூத நாளின் ஆரம்பம்
இரண்டாம் மணி காலை 7:00 காலை நேர செயல்பாடுகள்
மூன்றாம் மணி காலை 9:00 காலை பலி / இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
நான்காம் மணி காலை 10:00 பொது கூடல்கள், போதனை
ஐந்தாம் மணி காலை 11:00 வேலை தொடரும்
ஆறாம் மணி மதியம் 12:00 இருள் பூண்டது
ஏழாம் மணி மதியம் 1:00 நாளின் மிகவும் வெப்பமான நேரம்
எட்டாம் மணி மதியம் 2:00 மாலை பலிக்குத் தயாராகுதல்
ஒன்பதாம் மணி மாலை 3:00 மாலை பலி / இயேசு மரணமடைந்தார்
பத்தாம் மணி மாலை 4:00 ஆலய பணிகள் முடிவடையும்
பதினொன்றாம் மணி மாலை 5:00 வேலை முடிந்து வீடு திரும்புதல்
பன்னிரண்டாம் மணி மாலை 6:00 சூரிய அஸ்தமனம் / யூத நாளின் முடிவு

யூத இரவு காவல்கள்
காவல் நவீன நேரம் அதன் முக்கியத்துவம்
முதல் காவல் மாலை 6:00 - 9:00 மாலை தொடக்கம்
இரண்டாம் காவல் இரவு 9:00 - 12:00 நள்ளிரவு அணுகும் நேரம்
மூன்றாம் காவல் நள்ளிரவு 12:00 - 3:00 நள்ளிரவு நேரம்
நான்காம் காவல் அதிகாலை 3:00 - 6:00 சூரிய உதயத்திற்கு முன்

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பிணி மற்றும் அவருடைய மரண நேரம்

கடவுளாம் பரமதந்தையின் ஆட்டிக் குட்டியான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, பழைய ஏற்பாட்டின் பலிகளை நிறைவேற்றும் வகையில், காலை மற்றும் மாலை பலிகளாக தன்னை அர்ப்பணித்தார்.

அதாவது, பழைய ஏற்பாட்டில், தினந்தோறும் காலை 9AM க்கு முதல் ஆடு பலி செலுத்தப்பட்டது. பின்பு 3 PM க்கு இரண்டாவது ஆடு பலி செலுத்தப்பட்டது.

அதே காலை 9AM நேரம் தான், AD 33 நிசான் 14(ஏப்ரல்3) இல், நம் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார்.பின்பு, அன்று மாலை 3PM க்கு சிலுவையில் உயிர் நீத்தார்.


இயேசு மூன்றாம் மணி வேளையில் (காலை 9:00) சிலுவையில் அறையப்பட்டார்.

மாற்கு 15:25 (EXB): “அது காலை ஒன்பது மணி (மூன்றாம் மணி), அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையச் செய்தனர்.”


இயேசு ஒன்பதாம் மணி வேளையில் (மாலை 3:00) மரணமடைந்தார்

மத்தேயு 27:45-50 (EXB): “நண்பகல் (ஆறாம் மணி) முதல் மூன்று மணி வரை (மாலை 3:00) நாடு முழுவதும் இருள் ஆனது...”


கடவுளின் ஞானம்

கடவுளின் திட்டம் அவரது அளவில்லா ஞானத்தை வெளிப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டில் உள்ள பலிகளில் இருந்து கிறிஸ்துவின் சிலுவை பயணம் வரை, அனைத்தும் துல்லியமான நேரங்களில் நிறைவேறியதை நாம் காண்கிறோம். அல்லேலூயா.


கிறிஸ்துவுக்குள்

Comments