யோர்தான் ஆற்றில் கடவுளின் திட்டம்
யோர்தான் நதி இஸ்ரயேலில் உள்ள ஒரே 360km உள்ள நதியாகும். இது லெபனான், சிரியா, இஸ்ரேல், மற்றும் யோர்தான் நாடுகளின் வழியாக ஓடுகிறது. இந்த நதி யூதம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதங்களில் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் பெறுகிறது. வேதாகமத்தில், யோர்தான் நதியின் புவியியல் அமைப்பு மூலமாக கடவுள் தமது திட்டத்தை எவ்வாறு நமக்கு அளிக்கிறார் என்று இந்த பாடத்தில் பார்ப்போம்.
யோர்தான் ஆற்றில் நடந்த வேதாகம சம்பவங்கள்
வனாந்திர பயணம் மற்றும் யோர்தானை கடந்து செல்லுதல்
யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேலர்கள் கானானுக்கு சென்றபோது, யோர்தான் நதி அவர்கள் முன் தடையாக இருந்தது. கடவுள் கட்டளையிட்டபடி, உடன்படிக்கை பெட்டியை தூக்கிச் சென்ற ஆசாரியர்கள் நதியில் அடியிட்டவுடன், அது இரண்டாக பிளந்து, மக்கள் உலர்ந்த நிலத்தில் நடந்துச் சென்றனர் (யோசுவா 3:1-17, 4:1-24).
எலியா மற்றும் எலீசா – நதி பிளந்தது
எலியா விண்ணுக்குக் கொள்ளப்பட்டதற்கு முன், தனது மேலுடுப்பை வைத்து யோர்தான் நதியைப் பிளந்தார் (2 இராஜாக்கள் 2:1-18). பின்னர், எலீசா அதே போல நதியைப் பிளந்து, யோர்தானை கடந்து சென்றார். வாசிக்கவும் (2 இராஜாக்கள் 2:13-14).
நாகமானின் குணமடைதல்
சிரியாவின் படைத்தலைவர் நாகமான், எலீசா தீர்க்கதரிசி கூறியபடி யோர்தான் நதியில் ஏழு முறை மூழ்கினார். உடனே, அவருடைய குஷ்டம் சரியாகிவிட்டது. வாசிக்கவும்(2 இராஜாக்கள் 5ஆம் அதிகாரம்).
யேசுவின் திருமுழுக்கு
திருமுழுக்கு யோவான் அவர்கள், யேசுவை யோர்தான் நதியில் ஞானஸ்நானம் செய்தார். இது அவரது ஊழியத்தின் தொடக்கமாகவும், பழைய மனிதனிலிருந்து புதிய வாழ்க்கைக்கான மாற்றத்தையும் குறிக்கிறது.
யோர்தானில் நடந்த இந்த நிகழ்வுகள் - ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது
- எகிப்திலிருந்து கானான்: தவறான உலக நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு, விண்ணக வாழ்விற்கு பயணம் மேற்கொள்ளுதலை குறிக்கிறது.
- எலியா சுழல் காற்றில் மறைதல்:உயிர்த்தெழுதலில் திருச்சபை பரமேறுவதை குறிக்கிறது.
- நாகமானின் ஏழு முழுக்கு: பாவத்தில் இருந்து விடுபட்டு விசுவாச வாழ்க்கையின் ஏழு படிகளை குறிக்கிறது.
- யேசுவின் ஞானஸ்நானம்: பழைய வாழ்வை விடுத்து புதிய ஆன்மீக வாழ்வின் தொடக்கம்.
யோர்தான் நதியின் புவியியல்
ஹெர்மோன் மலையின் அழகை சிறிது நேரம் செலவழித்து இந்த காணொளியில் பாருங்கள்.
யோர்தான் நதி - ஹெர்மோன் மலையிலிருந்து மூன்று முக்கிய ஊற்றுகளால் உற்பத்தியாகிறது:
- ஹஸ்பானி ஊற்று (லெபனான்)
- பனியாஸ் ஊற்று (சிரியா)
- தான் ஊற்று (இஸ்ரேல்)
ஹெர்மோன் மலை மற்றும் வேதாகம நிகழ்வுகள்
9232 அடியின் உயரத்தில் உள்ள ஹெர்மோன் மலை, பல முக்கியமான வேதாகம நிகழ்வுகளுடன் தொடர்புடையதாகும்:
- ஆபிரகாமின் உடன்படிக்கை (ஆதியாகமம் 13:18, 23:1-20): ஆபிரகாம், சாராவின் அடக்கத்திற்காக மக்பேலா குகையை வாங்கினார்.
- முற்பிதாக்களின் அடக்கம்: ஆபிரகாம், ஈசாக்கு, ரெபேக்கா, லேயா மற்றும் யாக்கோபு இங்கு அடக்கம் செய்யப்பட்டனர்.
- தாவீதின் அருள் பொழிவு (2 சாமுயேல் 2:1-4): தாவீது ஹெப்ரோனில் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார்.
- அப்சாலோமின் கிளர்ச்சி (2 சாமுயேல் 15:7-12): அப்சாலோம் தனது தந்தையான தாவீதுக்கு எதிராக சதி செய்தார்.
யோர்தான் நதியின் கீழே பாயும் வழிதடங்கள்:

- ஹெர்மோன் மலை
– கடவுள் வாசம் செய்யும் பரலோகத்தை குறிக்கிறது. சங்கீதம் 133:3 - ஹூலா பள்ளத்தாக்கு
– ஒரு பசுமையான பகுதி. கடல் மட்டத்தில் இருந்து 230 அடி உயரத்தில் (230 Ft Above Sea Level) உள்ளது. பரிபூரணமாக இருந்த ஏதேன் தோட்டத்தை குறிக்கிறது - கலிலேயா கடல்
– யேசுவின் ஊழியத்தில் முக்கிய இடம். கடல் மட்டத்தில் இருந்து 850 அடி கீழே (850 ft Below Sea Level) உள்ளது. நோவாவின் காலத்தில் வந்த ஜல பிரளயத்தை குறிக்கிறது. - யோர்தான் பள்ளத்தாக்கு
– இஸ்ரேல் மற்றும் ஜார்டன் நாட்டுக்கு இடையே எல்லை. (360 KM Length). மிகுந்த வளைவுகள் நிறைந்த வழித்தடம். மனிதனின் பாடுகள்/பாவங்கள் நிறைந்த இந்த இரண்டாம் உலக காலப்பகுதியை குறிக்கிறது. - மரண கடல்
– உலகிலேயே கடல் மட்டத்துக்கு மிகவும் தாழ்வான 1300 அடி கீழே உள்ள பகுதி. (1300 Feets Below Sea Level) மரணத்தை அடையாளப்படுத்தகிறது.

மேலுள்ள படத்தில், ஹெர்மோன் மலையில் தொடங்கி எவ்வாறு யோர்தான் ஆற்றில் நீர் படிகை சிறிய தூரத்திற்குள்ளாவே, பல்வேறு தாழ்வான மட்டத்துக்கு செல்கிறது என்பதை கவனியுங்கள்.
அது போலவே யோர்தான் நதி ஹூலா பள்ளத்தாக்கின் பசுமையான நிலத்திலிருந்து சவக்கடலின் (DEAD SEA) உயிரற்ற நீருக்குள் வீழ்கிறது.
இது மனிதன் கிருபையிலிருந்து வீழ்ந்துவிட்டதை குறிக்கிறது
மனிதன் இழந்த மகிமை
பிரசங்கி 7:29-ல், “கடவுள் மனிதனை செம்மையானவனாக படைத்தார், ஆனால் அவர்கள் பல விதமான யோசனைகளை தேடிச் சென்றார்கள்” என்று கூறுகிறது.
இந்த வசனம் மனிதன் தனது முதன்மை பரிசுத்தத்தை எப்படி இழந்துவிட்டான் என்பதைக் காட்டுகிறது. கடவுளின் வழிகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, மக்கள் அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர், அதில் பாலினம் மற்றும் திருமணத்தை மறுபரிபாஷை செய்வதும் அடங்கும்.
கடவுள் நோவாவிற்கு உடன்படிக்கை அடையாளமாக கொடுத்த வானவில் சின்னத்தை, LGBTQ என்ற மண்ணாங்கட்டி இயக்கம் தனது சின்னமாக பயன்படுத்துவது, மனிதன் கடவுளின் பரிசுத்தமான உண்மைகளை திருப்புவதன் கொடூரத்தை காட்டுகிறது.
அப்போஸ்தலர் 17:26 நாம் எல்லோரும் ஒரே ரத்தத்திலிருந்து வந்தவர்கள் என்று நினைவூட்டுகிறது, ஆனால் சமூகம், சாதி மற்றும் இனப் பிரிவுகளை உருவாக்கி, வெவ்வேறு பின்னணியுடைய மக்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துகிறது.
எரேமியா 4:22 மனிதனின் முட்டாள்தனத்தை கடிந்து கூறுகிறது, “மக்கள் புத்தியில்லாதவர்கள், அவர்கள் நல்லதை புரிந்து கொள்ளமாட்டார்கள், மாறாக தீமை செய்யத்தான் திறனுள்ளவர்கள்.” இருப்பினும்,
தீத்து 3:3 "நாமும் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்தோம், ஆனால் தேவ கிருபை நம்மை மாற்றியது என நினைவூட்டுகிறது.
எபேசியர் 2:2 "அப்பொழுது நீங்கள் இவ்வுலகப்போக்கின்படி, வான்வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப் பணிந்து நடந்தீர்கள்." இவ்வசனம், மனிதனின் திரும்பியுள்ள பாதையை விவரிக்கிறது.
அது போலவே யோர்தான் நதியும் பல இடங்களில் திரும்பி, வழுக்கி, வளைந்து ஓடுகிறது.
இந்த நதியின் இறுதி நிலை - மிகுந்த மாசடைந்த, உயிரற்ற தன்மை - கட்டுப்பாடில்லாத பாவத்தின் விளைவுவான மரணத்தை குறிக்கிறது.
யோர்தான் நதியின் நீர் மிகுந்த Manganese, Potassium, Bromine மற்றும் சோடியம் கொண்டு மாசடைந்திருப்பது போல, மனிதனின் பாவம் இந்த உலகையே கலங்கச் செய்துவிட்டது.
கடவுள் யோர்தான் நதியையும் உலகத்தையும் புதுப்பிக்க வாக்களித்திருக்கிறார்
தற்போது யோர்தான் ஆறு, இறுதியில் இந்த பரிதாப நிலையை அடைந்தாலும், கடவுள் தனது ராஜ்யத்தில் யோர்தான் நதியை மீண்டும் புதுப்பிப்பதாக வாக்களித்திருக்கிறார்.
சகரியா 14:8-ல்,
“அந்த நாளில், ஜெருசலேமிலிருந்து வாழும் நீர் புறப்படும்; அதில் பாதி கிழக்கே மரண கடலுக்கு, மற்ற பாதி மேற்கே மத்தியதரைக் கடலுக்கு பாயும்” என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது. இந்த வாழும் நீர் கடவுளின் உண்மையை குறிக்கிறது, இது உலகத்தை சுத்திகரித்து புதுப்பிக்கும்.
எசேக்கியேல் 47:1-11
திருச்சபையில் இருந்து ஓடும் ஒரு ஆற்றை விவரிக்கிறது, அது மெதுவாக ஆழமடைகிறது - கணுக்கால் உயரம், முழங்கால் உயரம், இடுப்பு உயரம், இறுதியாக கடந்து செல்ல முடியாத ஆழமான நீர். இது கடவுளின் ராஜ்யத்தில் உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் படிப்படியாக வெளிப்படுத்தப்படும் என்பதை குறிக்கிறது.
எசேக்கியேல் 47:8 இந்த நீர் சவக் கடலை சுத்திகரித்து மீண்டும் உயிரோட்டமுள்ள மீன்களால் நிறையும்படி செய்யும் என்று கூறுகிறது.
வெளிப்படுத்தல் 22:1-ல்,
இதேபோன்ற தீர்க்கதரிசனம் காணப்படுகிறது, இதில் கடவுளின் சிங்காசனத்திலிருந்து வாழ்நீர் பாய்ந்து, அனைத்து விஷயங்களையும் மீண்டும் புதுப்பிக்கிறது. வரவிருக்கும் கடவுளின் ராஜ்யத்தில், யோர்தான் நதி மீண்டும் தூய, உயிர் கொடுக்கும் நீரால் பாயும்.
உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக.
உம்முடைய சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவதை போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
ஆமென்
TO DISCOVER MORE, WE RECOMMEND YOU TO READ THIS ARTICLE:
Scientific Research on Jordan River - By Kenneth Ray Olson
Comments
Post a Comment