FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




HAG HAMATZOT - FEAST OF UNLEAVENED BREAD - புளிப்பற்ற அப்பப் பண்டிகை - LEVITICUS 23: 6-8

Hag Hamatzot

Hag Hamatzot - feast of unleavened Bread


நிழல் பொருள்

Unleavened Bread

நிழல்


லேவியர்: 23: 6 - 8
6அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழுநாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள்.
7பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.
8ஏழுநாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.

பொருள்

🔹 புளிப்பில்லா அப்ப பண்டிகை முதலாம் மாதமான நீசான் மாதம் 15 ஆம் தேதியிலே துவங்கி 21 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் அனுசரிக்கப்படுவதாகும் .
Unleavened bread
🔹முதல் நாளான 15 ஆம் தேதியும் கடைசி நாளான 21 ஆம் தேதியும் பரிசுத்தமான சபை கூடும் நாட்கள் ஆகும் .

🔹இதை அனுசரிக்கும் முன்பு பஸ்கா ஆடு பலியிடப்பட்டிருக்க வேண்டும் .

🔹ஓய்வு நாளாகிய நீசான் 15 ஆம் தேதிக்கு மறுநாளாகிய 16 ஆம் தேதி இஸ்ரயேல் ஜனங்கள் தங்களின் வெள்ளாண்மையை அறுத்து அதன் முதற்பலனை கர்த்தருடைய சந்நிதியிலே அசைவாட்ட வேண்டும் .

🔹இதன் பொருள் என்னவெனில்...
பஸ்கா ஆடாகிய நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பலியிடப்பட்ட பிறகு நாம் கடக்கும் ஏழு சபையின் காலப்பகுதியாகும் .
Unleavened bread
🔹பண்டிகை அனுசரிக்கப்படும் ஏழு நாட்கள் ஏழு சபையின் காலப்பகுதியை குறிப்பதாய் உள்ளது .
🔹முதலாம் சபையின் துவக்கத்தை அடையாளப்படுத்தும் பண்டிகையின் முதல் நாள் ஒரு பரிசுத்த ஓய்வு நாளாகும் .

🔹அதேபோல் ஏழாம் நாளை அடையாளப்படுத்தக்கூடிய ஏழாம் சபையின் காலமும் பரிசுத்தமான ஓய்வு நாளாக அனுசரிக்கப்பட வேண்டும். 

🔹இதன் பொருள் என்னவெனில்,
ஏழாம் சபையின் காலப்பகுதியான சபையின் அறுவடை காலத்தில் அவருடைய பரிசுத்தவான்களை கூட்டி சேர்க்கும் மிக முக்கியமான கடவுளின் திட்டத்தை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய இரண்டாம் வருகையில் நிறைவேற்றிக் கொண்டிருப்பதினால் இது பரிசுத்தமான சபை கூடுதலாக அனுசரிக்கப்பட வேண்டும் .

🔹நீசான் மாதத்தில் இஸ்ரயேல் ஜனங்கள் வாற்கோதுமை அறுவடை செய்வார்கள். அந்த வாற்கோதுமை அறுவடையின் முதற்பலனையே நீசான் மாதம் 16 ஆம் தேதி அவர்கள் அசைவாட்டும் காணிக்கையாக செலுத்த வேண்டும் .

🔹எனவே வாற்ககோதுமையின் முதற்பலனின் அசைவாடும் காணிக்கை கர்த்தரகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை அடையாளப்படுத்துகிறது.

கிறிஸ்துவுக்குள்


Comments

Post a Comment