FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




PARABLE OF THE EVIL TENANTS | கொடிய குத்தகைக்காரர் உவமை - MATTHEW 21:33-43, MARK 12: 1-12, LUKE 20: 9-19

Parable of the Evil Tenants

Parable of the Evil Tenants


அன்புடையீர், வணக்கங்கள்.
நிழலும் - நிஜமும்
Parable of the Evil Tenant

நிழல்:
மத்தேயு 21:33-43
33“மேலும், ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி* வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
34பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.
35தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.
36மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.
37தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.
38அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
39பின்பு, அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.
40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார்.
41அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள்.
42இயேசு அவர்களிடம், “‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?
43எனவே, உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
நிஜம்
வீட்டு எஜமானாகிய ஒரு மனுஷன்
நம்முடைய பரமதந்தையை அடையாளப்படுத்தும்.
திராட்சைத் தோட்டம்
இஸ்ரயேல் ஜனங்களை அடையாளப்படுத்தும். (ஏசாயா 5:1-7)
திராட்சை தோட்டத்தை சுற்றி வேலி அடைத்து ஆலை மற்றும் கோபுரத்தை கட்டுதல்
இஸ்ரயேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை அடையாளப்படுத்தும். (யோசுவா 23:1)
குத்தகைக்கு விடப்பட்ட தோட்டக்காரர்
இஸ்ரயேலை ஆண்ட ராஜாக்கள், இஸ்ரயேல் மக்களுக்கு மதத்தலைவர்களாக இருந்த வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்களை அடையாளப்படுத்தும். (மத்தேயு 23:2)
கனிக்காலம் சமீபித்த சமயம்
யூதர்களின் அறுவடை காலத்தை அடையாளப்படுத்தும். (மத்தேயு 3:12)
எஜமானின் ஊழியக்காரர்
நம்முடைய பரமதந்தையின் ஊழியத்தை செய்த யோய்தாவின் குமாரனாகிய சகரியா (2 நாளாகமம் 24:20) மற்றும் ஸ்தேவானை (திருத்தூதர் பணிகள் 7:51-58)அடையாளப்படுத்துகிறது.
ஊழியக்காரரை கல் எறிந்து கொன்றது
நம்முடைய பரமதந்தையின் ஊழியத்தை செய்த தீர்க்கதரிசிகளை கொலை செய்தது. (மத்தேயு 23:31)
எஜமான் தன் குமாரரை அனுப்புதல்
நம் பரமதந்தை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மீட்ராகவும், (யோவான் 3:16) யூத யுகத்தின் அறுவடையாளராகவும் (மத்தேயு 3:12) அனுப்பியதை அடையாளப்படுத்துகிறது.
மகனை திராட்சைத் தோட்டத்திற்கு புறம்பே தள்ளி கொலை செய்தது
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நகரத்திற்கு புறம்பே கொலை செய்ததை அடையாளப்படுத்தும். (திருத்தூதர் பணிகள் 3:15)
எஜமான் திராட்சைத் தோட்டக்காரரை அழித்து போட்டது.
கிபி 70-ல் தீத்துராயன் இஸ்ரயேல் மக்களை நாட்டை விட்டு துரத்தி அடித்து, பலரை கொலை செய்ததை அடையாளப்படுத்தும். (மத்தேயு 23:37, 38)
கனி கொடுக்கத்தக்க வேற தோட்டக்காரர் இடத்தில் திராட்சை தோட்டத்தை குத்தகையாக கொடுப்பது
புறஜாதிகளுக்கு பரலோக அழைப்பு செல்வதை அடையாளப்படுத்தும். (திருத்தூதர் பணிகள் 13:46).
கிறிஸ்துவுக்குள்

Comments