FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



YOUR SALVATION IS NEAR | உங்கள் ரட்சிப்பு சமீபமாயிற்று - BROTHER ARUL VELANKANNI, DINDIGUL

இருளுள்ள ஸ்தலத்தின் விளக்கைப் போல
தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல்களைக் காணும் போது....
இதோ நம் ரட்சிப்பு சமீபமாயிற்று;

பிரகாசமான விளக்கைக் கையில் வைத்துக் கொண்டு, எண்ணெய் சேகரிப்தில் துரிதம் காட்டி... தூக்கமில்லாமல் இருந்தோமானால் ... இதோ, என் ரட்சிப்பு சமீபமாயிற்று:

ஆகாயத்தில் ஏறுதல் போன்ற சந்தோஷத்திலும், ஆழத்தில் இறங்கும் துக்கத்தின் போதும், ரம்மியமான மனநிலையில் திருப்திஏற்படும்போது, இதோ... நமது ரட்சிப்பு சமீபமாயிற்று;

போராட்டங்களும்.- போர்களும், புரட்சியும், பூமியதிர்ச்சியும் தீவிரமடைகிறதோ.... ஆம்... கர்த்தரின் சேனை ஆயத்தமாகிறது, இதோ--- என் ரட்சிப்பு சமீபமாயிற்று:

தம்முடைய நகரத்தில் தீங்கை கட்டளையிடுகிறாரா தீங்கு அனைவரையும் அர்மகெதோனில் கூட்டிச் சேர்க்கிறதா...
இதோ, நமது ரட்சிப்பு சமீபமாயிற்று.

ஓட்டம் விழிபிதுங்க... மூச்சிரைக்க வேகம், கூடுகிறதா? இதோ! எல்லைக்கோடு அருகில் உள்ளதால் நமது ரட்சிப்பு சமீபமாயிற்று.

அநியாயம் செய்கிறவன். அதிலே வெகுமானம் தேடுகிறானா---பரிசுத்தமாகிறவர்கள்..அதனிமித்தம் துன்புறுகிறாரா? பதட்டம் வேண்டாம்..இதோ நம் ரட்சிப்பு சமீபமாயிற்று:

அலைகளின் அலைக்களிப்பால் விசுவாசக் கப்பல் தத்தளித்துப் போராடுகிறதா-.. இதோ அடக்குகிறவர் அருகில் இருப்பதால், நமது ரட்சிப்பு சமீபமாறிற்று.

சில நேரங்களில் ஒன்றுமே புரியவில்லையா.. முட்டுச்சந்திலே முட்டினதைப் போல முளை ஸ்தம்பித்துப் போகிறதா... முடிவைக் கர்த்தரிடம் விட கண்ணீர் முட்டுகிறதா? பயப்படாதீர்கள்-. நமது ரட்சிப்பு சமீபமாயிற்று.

உழுகிறவனாகிய உபத்திரவம்...
அறுக்கிறவனை நெருங்கிப் பிடிப்பதால், அறுவடையின் வேலை தொய்வடைகிறதா?
ஆம்.. நமது ரட்சிப்பு சமீபமாயிற்று.

தீர்க்கதரிசனம் வெளிப்பபையாக நிறைவேறவில்லையே! அதன் தீர்மானங்களை நான் காணவில்லையே, இன்னும் காலம் செல்லும் என்று கருத்தற்று இருக்க வேண்டாம்.

நோக்கங்களை மாத்திரமே காண்கின்ற இறைவன்,
அதன் தாக்கங்களை நிறைவேற்றி முடிக்கும் போது,
தீங்கு நாள் வருமுன் வருமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுவான் என்று அறிவோமாக;

அநேகருடைய அன்பு தணிந்து  போனாலும், ஒரு சிலரின் அன்பு மட்டுமே ஓங்கி வளரும், ஆட்டுக்குட்டியானவரின் மனைவியோ தன்னை, ஆயத்தப்படுத்திக் கொண்டே இருக்கட்டும்...' என்னதான் குதிரை [சபை] யுத்தத்துக்கு ஆயத்தம் ஆனாலும், ஜெயமோ [ரட்சிப்பு] கர்த்தரால் மட்டுமே வரும்!!
ஆமென்.
BR ARUL VELANKANNI, DINDIGUL, 9789387638

Comments